(வெருளி நோய்கள் 891-895: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 896-900 குனிவு, வளைவு, கூன் முதலானவை பற்றிய இயல்பு கடந்த பேரச்சம் கூன் வெருளி.குனிவு வெருளி என முன்பு குறித்திருந்தேன். இப்பொழுது கூன் வெருளி என மாற்றியுள்ளேன்.இராமாயணத்தில் இராமனைக் காட்டிற்கு அனுப்பக் காரணமாக இருந்த மந்தரை என்னும் பெண்மணி கூனியாக இருந்தமையால், கூனி என்றாலே சூழ்ச்சிக்காரர் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது.துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் (இராமாயணம்,அயோத்தியா காண்டம்,2.46/4)சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள்(இராமாயணம்,அயோத்தியா காண்டம், 2.55/2)என மந்தரையாகிய கூனியைக் கொடுமன கூனி…