வெருளி நோய்கள் 961-965: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 956-960: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 961-965 சங்கடம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சங்கட வெருளி.சங்கடங்கள் (Embarrassment) மனஅளவிலும் குமுக அளவிலும் பல தீமைகளை ஏற்படுத்தும். அவை மனச்சோர்வு, பதற்றம், அவமானம், தன்மதிப்புக் குறைவு, மற்றவர்களைப் பற்றிய பயம்,தோல்வி பயம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மேலும் சில சமயங்களில், குமுகத் தொடர்புகளைத் தவிர்ப்பதற்கும், செயல்திறன் வீழ்ச்சிக்கும் வழிவகுத்து, தனிப்பட்ட/கல்வி/தொழில்முறை வாழ்க்கையைப் பாதிக்கும். எனவே, சங்கடங்கள் நேரும்பொழுதோ சங்கடங்கள் வரும் என எதிர்நோக்கும் பொழுதோ வெருளிக்கு ஆளாகின்றனர். இறையன்பர்கள் சங்கடங்களால் வரும் தீமைகளைத் தடுக்கும்…
