பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27  ****** பிறர் நலத்திற்காக வாழ்க! பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு காமர் பொருட்பிணிப் போகிய                            நற்றிணை 186 : 8-9 பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சத்துடன் பொருளாசையைப் போக்கிய தலைவன். முழுப் பாடல்: கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கிஇரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டுபெருங்கை யானை பிடியெதிர் ஓடும்கானம் வெம்பிய வறம்கூர் கடத்திடைவேனில்ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் 5பாண்யாழ்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24: வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க!  – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24 வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! “வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லை ஆகுமதி”               புறநானூறு – 27 : 15 – 17 பாடியவர் :  உறையூர் முதுகண்ணன் சாத்தனார். பாடப்பட்டோன் :  சோழன் நலங்கிள்ளி. திணை :   பொதுவியல். துறை :   முதுமொழிக் காஞ்சி. வல்லவர் ஆயினும், வல்லவர் அல்லர் ஆயினும்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23 சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! ““- – என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப;சாலார் சாலார் பாலர் ஆகுபவே.” புறநானூறு 218 : 5 – 7 பாடியவர்: கண்ணகனார், நத்தத்தனார் எனவும் சொல்வர்.திணை: பொதுவியல். துறை: கையறு நிலை.குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்ததனைக் கண்டு பாடியது. சான்றோர், சான்றோர் பக்கமே சேர்வர்; சால்பில்லாதார் பக்கமே சால்பில்லாதார் சேர்வர்.இவை பாடலின்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – இலக்குவனார்திருவள்ளுவன்

(பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே!  “…பெரியோர் நாடி நட்பின் அல்லது, நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே…”                   – கபிலர், நற்றிணை 32: 7 – 9 பதவுரை: நாடி = ஆராய்ந்து; நட்பின் = நட்பு கொள்வது ; நட்டு = நட்புகொண்டு;  நாடார் = ஆராயார்; ஒட்டியோர்…

காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் – இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 20 காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் நளி இரு முந்நீர் ஏணி ஆக,வளி இடை வழங்கா வானம் சூடியமண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,முரசு முழங்கு தானை மூவர் (வெள்ளைக்குடி நாகனார், புறநானூறு, பாடல் 35, 1- 4) புலவர் வெள்ளைக்குடி நாகனார் சோழ வேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் வறட்சியில் வாடும் மக்களின் நன்மை கருதி வரியைத் தள்ளுபடி செய்யுமாறு வேண்டிய பாடல். இதற்கிணங்க வேந்தரும் வரியைத் தள்ளுபடி செய்தார். இப்பாடல் உழவின் சிறப்பையும் பல…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 : மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!-இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே! மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்பொன்னும் கொள்ளார் புலவர் கணி புன்குன்றனார், நற்றிணை 226.1-3 சிலர் புலவர் பெயரை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடிய கணியன் பூங்குன்றனார் எனக் குறிப்பிடுகின்றனர். சொற்பொருள்: மரம் சா – மரம் சாகும்படி; உரம் சா – வலிமை குன்றும்படி: பொன்னுங் கொள்ளார் மன்னர் – ஆள்வோர் இறைப்பொருள் வாங்க மாட்டார். இலை, பூ, காய்,…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 : உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 : பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்!  “யானை வேட்டுவன் யானையும் பெறுமே;குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”               புறநானூறு 214 : 4-5 பாடியவர்: கோப்பெருஞ் சோழன்திணை: பொதுவியல்துறை: பொருண்மொழிக் காஞ்சிசொற்பொருள்: பூழ் = சிறு பறவை; காடை (ஒருவகைப் பறவை) “உயர்ந்த இலக்கு வெற்றியைத் தரும், தாழ்ந்த இலக்கு தோல்வியைத்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17: பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை –16 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! உள் இலோர்க்கு வலியாகுவன்கேள் இலோர்க்குக் கேளாகுவன்                புறநானூறு 396 : 10-11 பாடியவர்: மாங்குடி கிழார்.பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.திணை: பாடாண்.துறை: கடைநிலை. மன்னன் எழினியின் மகன் ஆதன் எழினியாதன் எனப்படுகிறான். உள் = மனவெழுச்சி (ஊக்கம்). வலி = பற்றுக்கோடு (ஆதரவு), வலிமை. கேள் = உறவு. வாட்டாறு என்னும் பெயருடைய ஓர் ஊர்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 16 : பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 16 பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்! “எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று எனமறுமை நோக்கின்றோ அன்றேபிறர் வறுமை நோக்கின்று அவன் கை வண்மையே” திணை – பாடாண்துறை – பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையுமாம். வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர் பாடியது. “பாணன் சூடிய பசும்பொன் தாமரை” எனத் தொடங்கும் பாடலில் இடம் பெறும் வரிகள். பதவுரை: எத்துணை = எவ்வளவு, எத்தனை; ஈத்தல் = கொடுத்தல்; மறுமை = மறுபிறவி, மறுவுலகம் என்பர் பிறர். மறுபயன் என்கிறார் பேராசிரியர்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 : மக்களுக்குத் தேவை நல்லாட்சி!- இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 மக்களுக்குத் தேவை நல்லாட்சி! “அரசுமுறை செய்க களவில் லாகுக”         – ஐங்குறுநூறு, பாடல் 8, அடி 2 புலவர்: ஓரம்போகியார்திணை: மருதம்சொற் பிரிப்பு : களவு இல்லாகுக நாட்டில் அரசு முறையாக இயங்க வேண்டும். வஞ்சகம் இல்லாதிருத்தல் வேண்டும் என்கிறார் புலவர் ஓரம்போகியார். அரசு முறையாக இயங்காவிடில் நாட்டில் பல தீவினைகள் நிகழும். மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்குகள் நேரும். இவையெல்லாம்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 : நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!- இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13: உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!  “நிலம்பெயரினும் நின்சொற் பெயரல்”         – புறநானூறு, பாடல் எண்-3, அடி 14. பாடியவர்: இரும்பிடர்த் தலையார்பாடப்பட்டோர்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதிதிணை : பாடாண்துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம் நில நடுக்கம் ஏற்பட்டு, இடம் பெயர்ந்தாலும் நீ சொன்ன சொல்லில் இருந்து தவறிச் செல்லாதே…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13: உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப்புலவர்கள்பொன்னுரை – 12 : அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13 உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்!  “நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க…” ஐங்குறுநூறு – 1, 2திணை: மருதம்பாடியவர்: ஓரம்போகியார் பொருள்: உணவுக் கூலங்கள் (தானியங்கள்) பொலியட்டும் தொழற்கருவிகளுக்கான மாழைகள் (உலோகங்கள்) பெருகட்டும். பண்டைத் தமிழ்நாட்டின் நாகரிக உயர்வையும் பண்பாட்டுச் சிறப்பையும் வரலாற்றுக் கூறுகளையும் விளக்குவன சங்க இலக்கியங்கள் என்பார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். எட்டுத் தொகையும் பத்துப்…