சட்டச் சொற்கள் விளக்கம் 896 – 900
(Explanation of Legal Terms 891-895 continued) சட்டச் சொற்கள் விளக்கம் 896-900 896. Assistance உதவி; உதவுதல்; துணை உதவி என்பது ஒரு செயலுக்கு உதவும் நிலையைக் குறிப்பது. துணை என்பது அதிகாரத்திற்கு அடுத்த நிலையில் இருந்து அல்லது அதிகாரத்தலைமைக்குப் பகரமாகத் துணை நிற்பதைக் குறிப்பது. aid என்பது இலவச உதவியைக் குறிப்பது. எ.கா. legal aid இதனை நாம் உதவுமை எனலாம். உதவி பலவகைப்படும். அவற்றை அடுத்துப் பார்க்கலாம். 897. assistance, consular /consular assistance தூதரக…