(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 87 : நிலவுக் காட்சி-தொடர்ச்சி) பூங்கொடி சண்டிலி புகழ்ந்து வேண்டல்           `அன்னைஎன் மொழியுள் அமைந்தநல் லிசையும் தொன்மை மொழியுள் தோன்றிசை சிலவும் ஒல்லும் வகையான் உணர்ந்துளேன் ஆயினும் உள்ளமும் உணர்வும் உருகிட இன்ப                 வெள்ளம் பாயும் வியனிசை இதுபோல்  225           இந்நாள் எல்லை யாண்டும் கேட்டிலேன்; என்நா சிறிதால் எவ்வணம் புகழ்வேன்? இதன்றிறம் சிறிதெனக் கியம்புதி கொல்லோ? பதமிது வன்றேல் பைந்தொடி பொறுத்தருள்’           எனநான் பணிவுடன் இயம்பினே னாக,  230           அனநடை…