மொழிப்போர் வரலாறு அறிவோம்!-9 : பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் – இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-8 : தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 9. பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் பிராமணர்களும் ஆதரவு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். “போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, இலக்குவனார், முடியரசன் போன்றோர் ஆதரவளித்தனர்.” (விக்கிபீடியா) . போராட்டக்காரர்களிடம் பிராமணர் எதிர்ப்பு உணர்வு ஆழமாக ஊன்றி இருந்தது. 100க்கு 3 பேராக உள்ள பிராமணர்களுக்காக 100க்கு 97…