(வெருளி நோய்கள் 361-365 – தொடர்ச்சி) வெருளி நோய்கள் 366-370 இறால் மீன்(shrimp) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறால் வெருளி.இறால் மீனைப் பார்த்தால் அல்லது சமைத்த இறாலைப் பார்த்தால் அல்லது இறால் மீனை உண்டால் பேரச்சம் வரும்.விலங்கு வெருளி(Zoophobia) உள்ளவர்களுக்கும் இப்பி வெருளி (Ostraconophobia) வருபவர்களுக்கும் இறால் வெருளி வர வாய்ப்புண்டு. 00 இறுதிச்சடங்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் இறுதிச்சடங்கு வெருளி.பிறரது இறுதிச்சடங்கைப்பார்க்கும் பொழுது அல்லது பிறரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் பொழுது துயரம் வருவதாலும் தனக்கோ தன் வீட்டிலுள்ள மூத்த உறுப்பினர்களுக்கோ பிறருக்கோ இறுதிச்சடங்கு…