வெருளி நோய்கள் 1051-1055: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1046-1050) வெருளி நோய்கள் 1051-1055 1051. சிறுத்தைப் புலி வெருளி – Gatopardophobia/Leopardaliphobia/ Pardalophobia/ Iagouarophobia சிறுத்தைப்புலி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறுத்தைப்புலி வெருளி. Gatopardo என்னும் இசுபானியச் சொல்லின் பொருள் சிறுத்தைப்புலி. Iagouaro என்றால் jaguar எனப் பொருள். மாயன் மொழியில் jaguar என்றால் ஒரே பாய்ச்சலில் கொல்லும் விலங்கு எனப் பொருள். காண்க: சிவிங்கிப்புலி வெருளி (Acinonyxphobia/Panthiraphobia) 00 1052. சிற்றின நாய் வெருளி- Chihuahuaphobia சிறிய அளவிலே வளரும் சிற்றின நாயைக் கண்டு ஏற்படும் பேரச்சம் சிற்றின…
