42. சனாதனத்தில் உயர்வு தாழ்வு இல்லை ; 43. ஆலயத்தில் நுழையத் தடை   இல்லை” 44.சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது” : ஆளுநர் இரவி சொல்வன சரிதானா? – இலக்குவனார்திருவள்ளுவன்

(சனாதனம் பொய்யும் மெய்யும் 41 – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 42-44 பல நகரங்களிலும் ஊர்களிலும் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்துள்ளன என்பதை வரலாறு சொல்கிறது. ஆரியத்தின் பாய்ச்சல் – வருணாசிரமத்தின் இரும்புக் கை – சனாதனத்தின் கொடுங்கை நீதித்துறை வரை பாய்ந்துள்ளதற்குப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். ஒன்று பார்ப்போம். 1874இல் மூக்க நாடார் என்பவர் மதுரையில் கோயில் ஒன்றில் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அவர் பிராமணர் அல்லர் என்பதை அறிந்த கோயிற் பணியாளர்கள் அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டனர். இதனால், நாடார்கள் பணியாட்கள் மீது வழக்கு தொடுத்தனர்….

41. சமநீதி வழங்குவதே சனாதனம். உயர்வு தாழ்வு கற்பிப்பது சனாதனம் அல்ல என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் பொய்யும் மெய்யும் 38-40 – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 41 கேழ்வரகில் நெய்வடிகிறது என்றால் நம்பக்கூடியவர்களும் இருப்பார்கள் என்று பொய்களை முரசறைவோர் இருக்கத்தான் செய்கின்றனர். என் செய்வது? பின்வரும் மனு கூறும் விதிகளைப் பாருங்கள். பிறகு முடிவெடுக்கலாம். நீதியில் மட்டுமல்ல நீதி வழங்கும் பொறுப்பிலும் பிராமணருக்கு ஒரு நீதி பிறருக்கு வேறொரு நீதி என்பதை உணரலாம். பிராமணக் குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது. (மனு 8. 20) பெண்கள் புணர்ச்சி விசயத்திலும்,…

  38. சனாதனத் தருமத்தில் தீண்டாமைக்கு இடமில்லை(ஆளுநர் இரவி) & 39. தீண்டாமையைப் போதிக்கிறது இந்துமதம் என்பது அறிவிலித்தனம் 40. சனாதனத்திற்கு ஆதரவாக நாடே கொந்தளிக்கிறது.- பொய்மைகள்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 37 – தாெடர்ச்சி) & 39. தீண்டாமையைப் போதிக்கிறது இந்துமதம் என்று அறிவிலித்தனமாகக் கூவி வருகிறதே! எத்தனை உதாரணம் சொல்லிப் புரிய வைக்க முயன்றாலும் மேலை நாட்டுப் பணத்துக்காக மானத்தை விற்ற கூட்டம் செவிப் புலன்களையும் விற்று விட்டது. எதுவும் காதில் ஏறாது. – ச.சண்முகநாதன் முகநூலில் சூத்திரன் தொட்டால் உணவு அசுத்தம். பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும், நாய் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது.(மனு 3. 241)  சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின்…

35.வேதங்கள்பெண்களைப்போற்றுகின்றனஅல்லவா?+ 36.சனாதனத்தில் யாவரும் சமம் என்று பொய்யாகக் கூறிவருகிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 33-34-தொடர்ச்சி) ஆமாம்  இது பொய்தான். சான்றுக்கு ஒன்றைப் பார்ப்போம் அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் இறப்பிற்குக் காரணம் சூத்திரன் ஒருவன் தவம் மேற்கொண்டுவருவதுதான் என நாரதர் இராமரிடம் கூறினார், இராமர் அவ்வாறு தவமிருந்த சம்புகனைத் தேடிச்சென்று அவனைத் தவக்கோலத்தில் கண்டான். அக்கணமே தன் வாளால் அவன் தலை வேறு உடல் வேறாகும்படி வாளால் வெட்டிக் கொன்றான். சூத்திரன் தவமிருக்கக்கூடாது என இராமரும் நாரதருமே கூறுகையில் சாதாரண மக்கள் என்ன எண்ண மாட்டார்கள். இத்தகைய சனாதனத்தை நாம் வரவேற்பது முறையா?…

அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே!

அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே! – இலக்குவனார் திருவள்ளுவன் தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினான முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா, இந்துக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார் எனப் பிராமணியன் என்பார் முறையிட்டுள்ளார். அவர், ஆ.இராசா, சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக  இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்;  சூத்திரனாக இருக்கும் வரை நீ பரத்தையின்(விபச்சாரியின்) மகன். எத்தனை பேர் பரத்தையின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? . .  எத்தனை பேர்…