நாலடி நல்கும் நன்னெறி 18: – செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- தொடர்ச்சி) செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும் சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத்து ஊற்றாகா ஆமிடத்தே ஆகும் சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால் இறுகாலத்து என்னை பரிவு (நாலடியார் 110) பதவுரை: சிறுகா=சிறுத்துப் போகா; குறைய மாட்டா; பெருகா=பெருத்துப் போகா; கூடா; முறை பிறழ்ந்து வாரா=முறை மாறி வாரா; உறுகாலத்து=துன்புறுங்காலத்து, ஊற்று ஆகா=ஊன்றுகோல் போல் துணை ஆகா ஆம் இடத்தே=ஆகும் காலத்தில் ஆகும்= நிகழும் சிறுகாலை=முற்காலத்து, பட்ட= உண்டாகிய, பொறியும்=நல்வினைகளும், அதனால்=ஆதலால், இறு…
