உ. தமிழர் திருமணமுறை – திருத்துறைக்கிழார்
(க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் உ.தமிழர் திருமணமுறை தொல் பழந்தமிழர் திருமணமுறை தமிழர்கட்கு இன்று புதுமையாகத் தோன்றுகின்றது. ஏன்? ஆரியர் தமிழகம் போந்து விளைத்த சீர்கேடுகளுள் இஃது ஒன்று! தமிழர்தம் மொழி, பண்பாடு, நாகரிகம் முதலியன கெட்டு யாவும் ஆரியமயமாகிவிட்டமையை எத்துணைத் தமிழர் அறிவர்? ஆகவே, பண்டைத் தமிழர் திருமண முறை பற்றி இன்று பேசினால் இற்றைத் தமிழர் ஏற்க மறுக்கின்றனர். ஆரிய முறை அத்துணை ஆழமாகத் தமிழரிடையே வேரூன்றிவிட்டது. பெரியார் ஈ.வெ.ராவும்…
