தமிழ்நாடு என்றால் திராவிடமே!- பேரறிஞர் அண்ணா
தமிழ்நாடு என்றால் திராவிடமே! தமிழ்நாடு என்று இதுகாறும் பேசியும் எழுதியும் வருவதெல்லாம் தமிழ்நாடு என்பதற்குத் திராவிட நாடு என்ற பொருளோடே யல்லாமல், தமிழ்மொழிப் பிரிவினையையே உடைய கருத்தில் அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஏனெனில், தமிழ்நாடு என்றால் திராவிட நாடு என்றும், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு. என்றும் நாம் எடுத்துக் காட்டவேண்டிய அவசியம் சிறிதுமில்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. அன்றியும், “திராவிடமே தமிழ் என்று மாறிற்று” என்றும், “தமிழே . திராவிடம் என்று மாறிற்று” என்றும் சரித்திராசிரியர்கள் முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட…