தமிழ்ப்பல்கலைக்கழக நிலத்தை, இந்தி சமற்கிருதப்பள்ளிக்குத் தாரை வார்ப்பதா? –  பெ.மணியரசன் கண்டனம்

சீரழியும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்: கொந்தளிக்கும் பெ.மணியரசன்!   தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா (சி.பி.எசு.இ.பள்ளி) அமைப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு இறங்கியுள்ளதற்குத் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் இந்தித் திணிப்புப் பள்ளியான கேந்திரியா வித்தியாலயா பள்ளி தொடங்கப்படுவது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் முதன்மொழியான தமிழுக்கு உலகிலுள்ள ஒரே பல்கலைக்கழகம், தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகமாகும். 1981…

தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும் – இலக்குவனார் திருவள்ளுவன், நக்கீரன்

தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும்     மக்கள் நலத்திட்டங்களிலும் மொழி வளர்ச்சியிலும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் பல திட்டங்களைச் செயற்படுத்திவருவது தமிழக அரசுதான். இந்த வகையில் தி.மு.க., அதிமுக ஆகிய இரண்டு திராவிடக்கட்சிகளின் ஆட்சிப் பொறுப்பாளர்களும் இவற்றிற்குக் காரணமான அலுவலர்களும் பணியாளர்களும் பாராட்டிற்குரியவர்களே!   திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்   அரசின் தமிழ்ப்பணிகள், தமிழ்வளர்ச்சி இயக்ககம் முதலான அரசின் துறைகள், உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் முதலான அரசுசார் நிறுவனங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்கள், ஆசியவியல் நிறுவனம் முதலான நல்கைநிதியுதிவி பெறும் நிறுவனங்கள் மூலம் சிறப்பாக  நடைபெறுகின்றன.   நம் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு எனச் சூட்டப்பட்டது(1968), தலைநகர் எல்லா…

அடிமைப்படக் காரணம் அரசர்களே!

நம் நாடு அடிமைப்படக் காரணம் நம் அரசர்களே! – தமிழ்நாடு அரசு அருங்காட்சியக மேனாள் துணை இயக்குநர்     “நம் நாட்டை ஐரோப்பியர்களுக்கு அடிமைப்படுத்தியவர்கள் நம் அரசர்கள்தாம்” என்றார் தமிழ்நாடு அரசு அருங்காட்சியக மேனாள் துணை இயக்குநர் செ.இராசா முகமது அவர்கள்.   தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற விசயநகரக் காலம் முதல் குடியேற்றஆதிக்கக்(காலனியாதிக்க) காலம் வரையிலான கடல்சார் வரலாறு என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:   “தமிழ்நாட்டில் விசயநகரப் பேரரசின் ஆட்சிக் காலம்…

புண்ணுக்குப் புனுகு பூசும் வேலை! – பழ.நெடுமாறன்

ஏழை  எளியோர்க்கு எட்டாக்கனியாகும் உயர் கல்வி!  இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக்கழகக் கிளைகளையும் தொடங்குவதற்கான ஒப்புதலை வழங்கும் முன்னேற்பாடுகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த காங்கிரசுக் கூட்டணி ஆட்சியின்பொழுது இதே முயற்சியில் ஈடுபட்டபொழுது மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ச.க கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், இப்பொழுது பா.ச.க அரசு அதே முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.   உலக வணிக அமைப்பின் முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவே இதுவாகும். இந்திய நாடு முழுவதிலும் இயங்கி வரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறவகைத்…

அறிக்கை – தமிழகத்தொல்லியல் கழகம்

26 ஆம் ஆண்டுக்கருத்தரங்கம் ஆவணம் 27 ஆவது இதழ் வெளியீட்டு விழா ஆடி, 2047 /  சூலை, 2016 ஓசூர் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறை தமிழ்ப்பல்கலைக்கழகம்

12ஆவது பன்னாட்டுத் தமிழ்க்கல்வெட்டுகள் பயிற்சிப்பட்டறை

தஞ்சாவூர் திசம்பர் 1 முதல் திசம்பர் 11 முடிய தொடக்க விழா: கார்த்திகை 14, 2046 / திசம்பர் 01, 2015 காலை 11.00 இந்த பயனுள்ள 10 நாட்கள்  தரமான தமிழ் கல்வெட்டுகள் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற விரும்புவோர்  தொடர்பு க்கு:   (1)  ஒருங்கிணைப்பாளர் சு இராசவேலு சுவடிப்புலத் தலைவர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் rajavelasi@gmail.com   (2) ஒருங்கிணைப்பாளர் அப்பாசாமி  முருகையன் உயராய்வு மையம் அறிவியல் ஆராய்ச்சி மையம் பிரான்சு a.murugaiyan@gmail.com   அன்புடன்   நூ த (உ)லோ சு  மயிலை 

6-ஆவது இதழியல் பன்னாட்டுக்கருத்தரங்கம், மலேசியா

சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6-ஆவது இதழியல் பன்னாட்டுக்கருத்தரங்கம் கார்த்திகை 7-9, 2045 : நவ.23-25, 2014  

குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகரின் நூற்றாண்டு விழா தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா ஆடி 27, 2045 / 12.08.2014 இல் சிறப்பாகநடைபெற்றது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் ம. திருமலை தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு இசை – கவின்கலைப் பல்கலைக்கழகத்தின்துணைவேந்தர் முனைவர் ஈ.காயத்ரி சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு ‘தமிழிசை வளர்ச்சியில் குடந்தை ப.சுந்தரேசனாரின் பங்கு’ என்னும்நூலை வெளியிட்டார். மேலும் முனைவர் இ.அங்கயற்கண்ணி அவர்கள் பாடிய‘ஆறுபடைவீடு : திருப்புகழ்ப் பாடல்கள்’ என்னும் ஆறுகுறுவட்டுகள் அடங்கியஒலிவட்டுகளையும் வெளியிட்டார்….