வெருளி நோய்கள் 734-738: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 729-733: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 734-738 காணாட்டம்(video game) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காணாட்டவெருளிludus electronicus என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவான Ludectro என்பதற்குக் காணாட்டம் எனப் பொருள்.00 காதல் களியாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதலாட்ட வெருளி.காதலினால் தீண்டல், நெருங்கிப் பழகுதல் முதலியன உறவிற்கோ, கற்பழிப்பிற்கோ, கருவுண்டாலுக்கோ இழுத்துச் செல்லும் என்ற கவலையால் வரும் பேரச்சமே இது. காதல் வெருளி உள்ளவர்களுக்கும் காதலாட்ட வெருளி வரும்.மென்மை என்னும் பொருளிலான malயssō என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து இலத்தீன் சொல்லான…
வெருளி நோய்கள் 723 கனவு வெருளி: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 719 -722 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 723 723. கனவு வெருளி-Oneirophobia கனவு தொடர்பான பெருங்கவலையும் தேவையற்ற பேரச்சமும் கனவு வெருளி. கனவு பற்றிய இயல்புக்கு மீறிய பேரச்சமே கனவு வெருளி. உறங்கினால் தீய கனவுகள், பேய்க்கனவுகள் வரும், மார்பில் பேய் அமர்ந்துஅழுத்தி மூச்சுத்திணற வைக்கும் என்பன போனற் அச்சங்களால் தூங்குவதற்குக்கூட அச்சம் கொள்வர்.நல்ல எண்ணங்களை மனத்தில் கொண்டு படுக்கச் சென்றால் கனவு வெருளி வர வாய்ப்பில்லை. அச்சம் தரும் கதைகளையும் செய்திகளையும் படித்தலும் கேட்டலும் ஒரு முறை கெட்டக் கனவு…
நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 17 புற அழகு அழகல்ல கல்வியே உண்மையான அழகு குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு. (நாலடியார் 131) பதவுரை: குஞ்சி யழகும்= தலைமுடி அழகும்; கொடுந்தானைக் கோட்டழகும்= வேலைப்பாடுகளாலும் வடிவமைப்பாலும் சிறந்துள்ள ஆடை அழகும்; மஞ்சள் அழகும் = மஞ்சள் பூசுவதால் ஏற்படும் அழகும்; அழகல்ல = அழகு அல்ல;…
நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே! பொய் சொல்லாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 14: நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 15 கேடு எண்ணாதே! பொய் சொல்லாதே! தான்கெடினும், தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின்ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க – வான்கவிந்தவையகம் எல்லாம் பெறினும் உரையற்கபொய்யோ டிடைமிடைந்த சொல் (நாலடியார், பொறையுடைமை, 80) தான் கெடினும் – தான் கெடுவதாக இருந்தாலும், அஃதாவது தனக்குக் கேடு வருவதாக இருந்தாலும்; தக்கார் கேடு எண்ணற்க – அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோருக்குக் கேடு செய்ய எண்ணாதே; தன்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – இலக்குவனார்திருவள்ளுவன்
(பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! “…பெரியோர் நாடி நட்பின் அல்லது, நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே…” – கபிலர், நற்றிணை 32: 7 – 9 பதவுரை: நாடி = ஆராய்ந்து; நட்பின் = நட்பு கொள்வது ; நட்டு = நட்புகொண்டு; நாடார் = ஆராயார்; ஒட்டியோர்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: back என்றால் முன் என்றும் பொருள்- இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –6, தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: back என்றால் முன் என்றும் பொருள் எந்த ஒரு சொல்லும் தான் பயன்படும் இடத்திற்கேற்ப உள்ள பொருளைச் “”சுமந்து செல்லும் ஊர்தி”தான். எனவே, மூலச் சொல்லுக்கு நேரான பெயர்ப்புச் சொல்லை அமைக்காமல் மூலப் பொருளுக்கு ஏற்ற பெயர்ப்புச் சொல்லை ஆக்க வேண்டும். சொல் செறிவாயும் செவ்விதாயும் இருத்தல் வேண்டும். பயன்பாட்டுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். ” “குன்றக் கூறல்” முதலான நூல்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 : மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!-இலக்குவனார் திருவள்ளுவன்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே! மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்பொன்னும் கொள்ளார் புலவர் கணி புன்குன்றனார், நற்றிணை 226.1-3 சிலர் புலவர் பெயரை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடிய கணியன் பூங்குன்றனார் எனக் குறிப்பிடுகின்றனர். சொற்பொருள்: மரம் சா – மரம் சாகும்படி; உரம் சா – வலிமை குன்றும்படி: பொன்னுங் கொள்ளார் மன்னர் – ஆள்வோர் இறைப்பொருள் வாங்க மாட்டார். இலை, பூ, காய்,…
122./133 தி.மு.க. தோழமைத் தலைவர்கள் சனாதனத்திற்கு எதிராகப் பேசி வருகிறார்களே! ++ 123. நிறைவான செய்தி என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்
(121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லையே – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 122-123 123. நிறைவான செய்தி என்ன? பக்தியின் பெயரால் ஞானம் என்ற பெயரால் யோகம் என்ற பெயரால் தத்துவம் என்ற பெயரால் ஆன்மீகம் என்ற பெயரால் கீதை பன்னிப்பன்னித் திரும்பத்திரும்பக் கூறுவதெல்லாம் நான்கு வருணப்பாகுபாடுதான் என்கிறார் நாரா நாச்சியப்பன்(கீதை காட்டும் பாதை, பக். 118). சிறந்தன என்றும் நல்லன என்றும் கூறப்படும் நூல்களில் இருந்தாலும் பொய்யாகக் கூறப்படும் தகவல்களை நம்பக்கூடாது. உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்கள்…
? 93. காயத்திரி மந்திரத்தைப் பிராமணரல்லாத பிறர் சொன்னால் என்ன ஆகும்? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 92 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 93 புத்தி விழிப்படைய காயத்திரி மந்திர வழிபாடு முதலியவற்றைச் செய்யுமாறு கடஉபநிடதம் கூறுகிறது. காயத்திரி மந்திரத்தைப் பிராமணர்கள்தான் சொல்ல வேண்டும் என்கிறது வேதம். இல்லை இல்லை. ஒழுக்கமானவர்கள் யாரும் காயத்திரி மந்திரம் கூறலாம் என இக்கால நஞ்சு நெஞ்சுடையோர் விளக்கம் தருவர். ஆனால் வேதத்தில் அவ்வாறு இல்லை. நம்மை ஏமாற்றுதற்காக இவர்கள் தரும் தவறான விளக்கம் இதுவே. பிராமணர்கள்தான் காயத்திரி மந்திரம் சொல்ல முடியும் என்றால் அவர்கள் மட்டும்தான் அறிவுக்கூர்மை…
திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் – அன்றே சொன்னார்கள் 32 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் –-தொடர்ச்சி) திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் கடலலைகள் நிலவினால் உருவாவதாகக் கி.மு.2ஆம் நூற்றாண்டில் செலியூகசு (Seleucus) என்னும் அறிஞர் குறிப்பிட்டார். பின்னர் உரோமன் அறிஞர் செனெக்கா (Seneca) நிலவொளிக்கும் கடலலைகளுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டார். கி.பி. 499 இல் ஆரியபட்டரும் இதைக் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1687 இல் அறிஞர் ஐசக்கு நியூட்டன் புவி ஈர்ப்பு விதியைத் தெரிவித்த பின்பு இக் கருத்து மேலும் வலுப்பட்டது. ஆனால், சங்கக் காலத்திலேயே நிலவொளிக்கும் கடல் அலைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன் வழி…
நாலடி நல்கும் நன்னெறி :10 வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன செய்க! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 10 வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை எனக்குத்தா யாகியா ளென்னையீங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள்–தனக்குத்தா யாகி யவளு மதுவானாற் றாய்தாய்க்கொண் டேகு மளித்திவ் வுலகு -நாலடியார், இளமை நிலையாமை 15 பொருள்: எனக்குத் தாயானவள் என்னை விட்டுத் தன் தாயைத் தேடிச் சென்று விட்டாள். அவளும் தன் தாயைத்தான் தேடிச் சென்றுள்ளாள். அதுபோல் வழிவழியே முன்னவரைத் தேடிச்செல்லும் நிலையாமையை உடையது இவ்வுலகு….
நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 9. இளமையிலேயே நல்லன செய்க! தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல் அம்மனைக்கோ லாகிய ஞான்று. -நாலடியார், இளமை நிலையாமை 14 பொருள்: கூன் விழுந்து உடல் தளர்ந்து தலை நடுங்கிக் கைத்தடி ஊன்றி வாழும் இம் மூதாட்டி முன்பு இவள் தாய் மூதாட்டியாக இருக்கும் பொழுது இளமை நலம் திகழப் பிறர்…
