௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் – திருத்துறைக்கிழார்
(அ. பழமையும் புதுமையும் – திருத்துறைக் கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் வரலாற்று அறிஞர்கள், ஆரியர் மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக இந்தியாவிலுள்ள செழிப்பான சிந்துசமவெளியில் புகுந்தார்கள் என வரலாறு எழுதியுள்ளனர். இன்றுள்ள ஆரியக் குஞ்சுகள், ஆரியர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு வந்ததை எவன் கூரை மீதிருந்து பார்த்தான் என்றும், பிரித்தாளும் சூழ்ச்சி தெரிந்த ஆங்கிலேயர் ஆரியர், திராவிடர் என்று பிரித்து வரலாறு எழுதிவிட்டனர்…
அ. பழமையும் புதுமையும் – திருத்துறைக் கிழார்
(எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் அ. பழமையும் புதுமையும் பழமை என்பது முதன் மாந்தன் தோன்றி வாழ்ந்து வந்த காட்டுமிராண்டிக் காலம் எனக் கருதிவிடல் வேண்டா. பண்பட்ட நாகரிகமெய்திய நல்வாழ்வு வாழ்ந்த நற்காலத்தையே. அக்காலங் கடந்து இன்றுகாறும் நடைபெறுகின்ற காலத்தையே புதுமையென்று குறிப்பிடுகின்றோம். பழமையில்தமிழர் தனிவாழ்வு வாழ்ந்தனர். உயர்ந்த நாகரிகத்தையும், பண்பாட்டையும் உலகுக்கு ஊட்டினர். தந்நலம் பெரிதெனக் கருதாது நாட்டுக்கும், மொழிக்கும் நற்பணி புரிந்தனர். தமிழ்மொழி ஒன்றே தமிழரின் ஆட்சிமொழி, பேச்சுமொழி, அனைத்து மொழியுமாக இருந்தது….
௪. திருத்தமாய்ப் பேசுங்கள்!-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்?-புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௪. திருத்தமாய்ப் பேசுங்கள்! தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது. அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும். இத்தகு தமிழ்மொழி சேர, சோழ, பாண்டிய அரசர்களால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும். பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது. மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது. தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது. தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி, சமயம், நாகரிகம்,…
௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்?-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(உ,உயர்தனிச் செம்மொழி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்? முன்னுரை உலக மொழிகளுள் முதன்மையானதும், பண்பட்டதும் தமிழ்மொழி ஒன்றே. எழுத்துகள் செப்பமாயமைந்தது; மென்மை, வன்மை, இடைமை ஒலிகளையுடைய எளிய இனிய மொழி; ஒரு சொற்கு ஒரு பலுக்கல் உடையது; ஒரு சொல்லில் உள்ள எல்லா எழுத்துகளும், ஒலிக்கும் இயல்புடையது. எழுத்து மாற்றம் வீரமாமுனிவரால் செய்யப் பெற்றபின், பெரியார் வழி பற்றி, தற்போது தமிழக அரசு ஓரளவு எழுத்துச் சீர்திருத்தம் செய்துளது. இதற்குமேல் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்றாலும் தற்காலத் தேவை கருதி…