தொல்காப்பியமும் பாணினியமும் – 9 : வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் 8  : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 9 வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு “இந்திரனுக்குப் பின்னும் பாணினிக்கு முன்னுமாக ஒருவன் பின் ஒருவராய் வந்த வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்பர். இவர்கள் ஒவ்வொருவர்க்கும் முப்பதாண்டுகளாக வைத்துக் கணக்கிடுங்கால் இந்திரனுக்கும் தொல்காப்பியம் – பாணினிக்கும் இடைப்பட்ட காலம் 1920 ஆண்டுகளாம்.” என்பது அடுத்த புரட்டாகும். ஆனால் இதை மெய்யென்று நம்பி, க.வெள்ளைவாரணார், தொல்காப்பியம்(வரலாறு) என்னும் தம் நூலில்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 8 : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை-இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 8 பழந்தமிழர் நாகரிகத்தைப் பேசும் நூல் பழந்தமிழர் நாகரிகத்தைப்பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியினை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப் பெரும் நூல் இது. தமிழினத்தின் பரந்துபட்ட பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத்தைச் கருதுவதில் யாதொரு தடையும் இல்லை. இந்நூலைத் தம் விழுமிய சொத்தாக எண்ணித் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்.(புலவர் தி.வே. விசயலட்சுமி,தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு…

தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 6 : பாணினியத்தின் சிறப்பு?!-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 7 தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே தமிழ் நூல்களைக் காப்பதற்காக இயற்றப் பெற்ற தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தமிழ்ச்சொற்களைக் கையாள்வதுதானே முறை. தமிழ் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவும் சமற்கிருதத்தை உயர்த்தும் நோக்கிலும் வையாபுரி போன்றோர் பல சொற்களையும் சமற்கிருதமாகத் தவறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்தில் எழுத்தமைப்பு உருவாக்கி அதன்பின் சொல் வளத்தை உருவாக்கிய சமற்கிருதச் சொற்கள் எங்ஙனம் தொல்காப்பியத்தில் இடம் பெற இயலும்? தமிழ் இலக்கணம் வகுக்க வந்த தொல்காப்பியர் எதற்கு வளமில்லாத…

தொல்காப்பியமும் பாணினியமும் – 6 : பாணினியத்தின் சிறப்பு?!-இலக்குவனார் திருவள்ளுவன் 

(தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்  – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 6 பாணினியத்தின் சிறப்பு?! தொல்காப்பியம் இயல்பிலேயே தமிழாகிய சிறந்த மொழிக்கான இலக்கணம் என்பதால் சிறப்பானதாக அமைந்துள்ளது. ஆனால் பாணினியின் அட்டாத்தியாயி சிறப்பாகத் திரித்துக் கூறப்படும் சிறப்பற்ற மொழியான சமற்கிருததத்திற்கானது என்பதால் திரிக்கப்பட்ட சிறப்பையும் உண்மையில் சிறப்பின்மையையும் கொண்டுள்ளது. பாணினியத்துக்கு மிக விரிந்ததொரு உரை செய்த பதஞ்சலி,  “இச்சூத்திரங்களின் பெருமையை நோக்குமிடத்து, பொருளில்லாத ஒரு எழுத்தையேனும் அவற்றினுள்ளே யான் காண்கிலேன்” என்று அட்டத்தாயி குறித்துக் கூறியுள்ளார். “எங்கப்பன் குதிருக்குள்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்  – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல்  – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 5 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்:       “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது  தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது….