நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: தொடர்ச்சி) பிறன் மனைவியை விரும்பினால் வருவது அச்சம்! அச்சம்! அச்சமே! எனவே, கை விடுக! புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல். (நாலடியார், ௮௰௩-83) பொருளுரை: பிறர் மனைவியை விரும்பி அவள் வீட்டிற்குள் புகும் பொழுது அச்சம்; அங்கிருந்து திரும்பி வெளியே வரும்பொழுதும்  அச்சம்; அவளுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும்போதும் அச்சம்; இக்கள்ள உறவைப் பிறர் யாரும்…

நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 18: – செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்: தொடர்ச்சி) பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க! உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; – கொடைக்கடனும் சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார் ஆஅயக் கண்ணும் அரிது.    (நாலடியார், 184) மழை பெய்யாத கோடைக் காலத்திலும், நீர் சுரக்கும் கேணி தன்னிடம் உள்ள தண்ணீரைப் பிறர் இறைத்து உண்ணக் கொடுத்து ஓர் ஊரைக் காப்பாற்றும். அது போலப், பெரியோர் வறுமையில் வாடித் தளர்ந்த காலத்திலும் பிறர்க்குக் கொடுப்பர்….

நாலடி நல்கும் நன்னெறி 18: – செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்: இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- தொடர்ச்சி) செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும் சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத்து ஊற்றாகா ஆமிடத்தே ஆகும் சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால் இறுகாலத்து என்னை பரிவு (நாலடியார் 110) பதவுரை: சிறுகா=சிறுத்துப் போகா; குறைய மாட்டா; பெருகா=பெருத்துப் போகா; கூடா; முறை பிறழ்ந்து வாரா=முறை மாறி வாரா; உறுகாலத்து=துன்புறுங்காலத்து, ஊற்று ஆகா=ஊன்றுகோல் போல் துணை ஆகா ஆம் இடத்தே=ஆகும் காலத்தில் ஆகும்= நிகழும் சிறுகாலை=முற்காலத்து, பட்ட= உண்டாகிய, பொறியும்=நல்வினைகளும், அதனால்=ஆதலால், இறு…

நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 17 புற அழகு அழகல்ல  கல்வியே உண்மையான அழகு குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு. (நாலடியார் 131) பதவுரை: குஞ்சி யழகும்= தலைமுடி அழகும்; கொடுந்தானைக் கோட்டழகும்= வேலைப்பாடுகளாலும் வடிவமைப்பாலும் சிறந்துள்ள ஆடை அழகும்; மஞ்சள் அழகும் = மஞ்சள் பூசுவதால் ஏற்படும் அழகும்; அழகல்ல = அழகு அல்ல;…

நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே!  பொய் சொல்லாதே! –தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 16 பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே! சினம் கூடாது எனச் சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், பதினெண்கீழ்க்கணக்குப் புலவர்கள், காப்பியப் புலவர்கள், சித்தர்கள், வள்ளலார் முதலிய அண்மைக்காலப்புலவர்கள், மேனாட்டறிஞர்கள் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். அணு என்பது மீச்சிறு அளவு. அத்தகைய அணு அளவும் சினம் கொள்ளக் கூடாது என்கிறார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அவர், “அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்“ என்கிறார். நம்மிடம் சினம் இல்லாமல் போனால் யாவும் கைகூடும். இதனை, …

நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே!  பொய் சொல்லாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 14:  நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 15 கேடு எண்ணாதே!  பொய் சொல்லாதே! தான்கெடினும், தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின்ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க – வான்கவிந்தவையகம் எல்லாம் பெறினும் உரையற்கபொய்யோ டிடைமிடைந்த சொல் (நாலடியார், பொறையுடைமை, 80) தான் கெடினும் – தான் கெடுவதாக இருந்தாலும், அஃதாவது தனக்குக் கேடு வருவதாக இருந்தாலும்;  தக்கார் கேடு எண்ணற்க –  அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோருக்குக் கேடு செய்ய எண்ணாதே;  தன்…

நாலடி நல்கும் நன்னெறி 14:  நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 13:  நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 14 : நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர் நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் – பரப்பக் கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக் கடுவினைய ராகியார்ச் சார்ந்து. (நாலடியார் பாடல் எண் 124) பதவுரை: அழல் – நெருப்பு, தீக்கொழுந்து, வெப்பம்; நெய்போல்வ தூஉம் – நெய்போன்ற தன்மை கொண்ட பொருளும்; உயர்வு சிறப்பும்மை நெய்யின் தன்மையையும், புண்களை யாற்றும்…

நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும் கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால் செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடை யார்.  நாலடியார்  பொருட்பால் – இன்ப இயல் – நன்றியில் செல்வம் 262 அதிகாரத் தலைப்பு விளக்கம்: “நன்றியில் செல்வம்” என்றால், பிறருக்கு உதவாத, அல்லது பயனில்லாத செல்வம் என்று பொருள்.  ஒருவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், அதை அவர்…

நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்!   – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி :10  வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை –  தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி : 11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா(து)எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்கொன்னாளர் சாலப் பலர். நாலடியார், அறிவுடைமை, 243 சொற்பொருள் : கொன்னாளர் = கரிசாளர் (பாவிகள்) ; காழ் = விதை; எனவே, காஞ்சிரங்காயின் /காஞ்சரங்காயின் விதை எனலாம். காஞ்சரஞ்காய் என்பது பூவரச மரத்தைப்போல் தோற்றமளிக்கும் நச்சுமரத்தின் காய். இதனை எட்டி…

நாலடி நல்கும் நன்னெறி :10  வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன  செய்க! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 10  வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை எனக்குத்தா யாகியா ளென்னையீங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள்–தனக்குத்தா யாகி யவளு மதுவானாற் றாய்தாய்க்கொண் டேகு மளித்திவ் வுலகு -நாலடியார், இளமை நிலையாமை 15 பொருள்: எனக்குத் தாயானவள் என்னை விட்டுத் தன் தாயைத் தேடிச் சென்று விட்டாள். அவளும் தன் தாயைத்தான் தேடிச் சென்றுள்ளாள். அதுபோல் வழிவழியே முன்னவரைத் தேடிச்செல்லும் நிலையாமையை உடையது இவ்வுலகு….

நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன  செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை  – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 9. இளமையிலேயே நல்லன  செய்க! தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல் அம்மனைக்கோ லாகிய ஞான்று. -நாலடியார், இளமை நிலையாமை 14 பொருள்: கூன் விழுந்து உடல் தளர்ந்து தலை நடுங்கிக் கைத்தடி ஊன்றி வாழும் இம் மூதாட்டி முன்பு இவள் தாய் மூதாட்டியாக இருக்கும் பொழுது இளமை நலம் திகழப் பிறர்…

நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை  – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 7 : பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 8 காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப் பல்கழன்று பண்டம் பழிகாறும் – இல்செறிந்து காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே ஏம நெறிபடரும் ஆறு. பொருள்: சொற்கள் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும் முதுமை வரையும் காமவழியில் செல்வார்க்குப் பேரின்ப நெறியில் செல்வதற்கு வழியில்லை. சொல் விளக்கம்: சொல்=சொற்கள்; தளர்ந்து=வலிமை குறைந்து(குழறி); கோல்=ஊன்றுகோலை; ஊன்றி=ஊன்றிக்கொண்டு; சோர்ந்த=தள்ளாடிய; நடையினர் ஆய்=நடையை உடையவராய், பல்=பற்கள், கழன்று=உதிர்ந்து,…