(சனாதனம் – பொய்யும் மெய்யும் 93 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96 பிராமணனைச் சாது என நினைத்து அழிப்பவன் செல்லுமிடங்களில் புவியும்  சோதியும் அவனை வெறுக்கும். பிராமணன் துன்புறுத்த(இம்சிக்க)த் தகாதவன். இந்திரன் அவனைத் தீச்சொல்லிலிருந்து காப்பான். பிராமணன் இனிமையான உணவை உண்கிறான் என அவ்வுணவு மீது ஆசை கொள்ளும் மதியற்றவன் நூறு முட்களுள்ளதை விழுங்குபவனாவன்; அவன்அதைச் சீரணிக்க இயலாது. பிராமணன் தேவர்களின் இதயத்தோடு அவனை ஏசுபவர்களைத் துவம்சம் செய்கிறான். பிராமணர்கள் எதிரியைத் தொலைவிலிருந்தே அழிப்பார்கள். அரசர்கள் பிராமணனது பசுவைப் புசித்து பாழானார்கள். தேவ பந்துவான பிராமணனை இம்சிப்பவன் முன்னோர்கள் செல்லும உலகத்துக்குச்…