122./133 தி.மு.க. தோழமைத் தலைவர்கள் சனாதனத்திற்கு எதிராகப் பேசி வருகிறார்களே! ++ 123. நிறைவான செய்தி என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்
(121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லையே – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 122-123 123. நிறைவான செய்தி என்ன? பக்தியின் பெயரால் ஞானம் என்ற பெயரால் யோகம் என்ற பெயரால் தத்துவம் என்ற பெயரால் ஆன்மீகம் என்ற பெயரால் கீதை பன்னிப்பன்னித் திரும்பத்திரும்பக் கூறுவதெல்லாம் நான்கு வருணப்பாகுபாடுதான் என்கிறார் நாரா நாச்சியப்பன்(கீதை காட்டும் பாதை, பக். 118). சிறந்தன என்றும் நல்லன என்றும் கூறப்படும் நூல்களில் இருந்தாலும் பொய்யாகக் கூறப்படும் தகவல்களை நம்பக்கூடாது. உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்கள்…
121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லை. அப்படியானால் திமுகவிலேயே இதற்கு ஆதரவு இல்லைதானே!
(சனாதனம் பொய்யும் மெய்யும் 120 தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 121 “சனாதனம் என்றால் 4% மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு. மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும். இதுதான் அதன் தத்துவம். 1835-இல் மெக்காலே பிரபு வரவில்லை என்றால், எல்லாரும் கல்வி கற்கலாம் என்ற சட்டம் வரவில்லை என்றால், நாம் கல்வி கற்றிருக்க மாட்டோம். என்று பேசியுள்ளார். மேலும், 1912-இல் பட்டதாரிகள் 100 பேரில் 94 பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 4% பேர் 94% பட்டம் பெற்றிருந்தார்கள். மீதி 96% பேர்…
119/133. சனாதனம் இல்லறத்தைப் போற்றுவது என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 117 + 118 தொடர்ச்சி) ஆரியர்களின் குடும்ப வாழ்க்கை என்பது யாருடனும் யாரும் உறவு கொள்ளலாம் என்பதே. தமிழர்களின் குடும்ப வாழ்க்கையோ இல்லறம் என அறமாகக் கூறப்படுகிறது. மனைவியை இழிவு படுத்துவது சனாதனம். மனைவியின் சிறப்புகளைப் போற்றவதே தமிழர் நெறி. இது குறித்துத் திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார், “இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியின் சிறப்புகளைத் தொகுத்துரைப்பதே திருக்குறளின் இல்லறவியல்” என்கிறார். “மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது என்கிறார். “நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக்கூடியவள் மனைவியேயாவாள். அவள் தன் கொண்ட கணவனிடம் நீங்காத…
117/ 133. ஏடுகளில் பிராமணர்களை உயர்த்திச் சொல்லியிருக்கலாம். அவற்றை மக்கள் பின்பற்றினார்களா?+118 வேதங்களைப் பின்பற்றலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 117 + 118 இராச சூய வேள்வியின்பொழுது அரசரின் வேலையாட்கள் பல வகை சுவையுள்ள இனிப்புகளையும் உணவுகளையும் இனிய பானங்களையும் பிராம்மணர்களுக்கு எக்காலமும் அளித்தனர். ஒவ்வொாரு நாளும் பிராமணர்கள் உண்டதற்கு அடையாளமான சங்கு ஊதப்பட்டது. அச்சங்கு அடிக்கடி ஊதப்பட்டதால் மக்கள் வியப்படைந்தனர். இராச சூய வேள்வியில் பிராமணர்களுக்குப் பரிமாறியது வேலையாட்கள் அல்லர். இரத்தினமாலைகளைச் சூடித் துலக்கப்பட்ட இரத்தினக் குண்டலங்களை அணிந்து அரசர்கள் ஆயிரக்கணக்கான பிரமாமணர்களுக்குப் பரிமாறினர். பல நாடுகளிலிருந்தும் வந்த பிராமணர்கள்…
116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 116 தமிழில் தொன்மம் என்பது பொருந்தாது. தொன்மக் கதைகள் என்ற பொருளில் இவ்வாறு கூறுகின்றோம். தொன்மக் கதையை இப்பொழுது கூறினால் தொன்மம் என்போமா? வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் நூலை நாம் தொன்மம் என்போமா? தொன்மம் என்று சொல்லப்படுவன எழுதப்படும்பொழுது தொன்மைச் செய்திகளை எழுதவில்லையே! மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். ஆனால், மகாபாரதத்தில் வியாசரும் ஒரு கதை மாந்தர்தானே. அப்படியானால் அவர் கால நூல்தானே இது. எனவே, தொன்மம் என்பது பொருந்தாது. காப்பியம்,…
