க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார்
(கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! – திருத்துறைக்கிழார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௩. போலித் தமிழர் இன்று தமிழ் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்கின்றனர். கிறித்தவர், இசுலாமியர், இந்துக்கள், சமணர், சீக்கியர், பௌத்தர் முதலிய மதத்தினரும், முதலியார், நாயக்கர், இரெட்டியார், நாயுடு, மராட்டியர், வேளாளர், தேவாங்கர், வன்னியர், கள்ளர், மறவர், நாடார், கௌடர், படையாட்சி, பள்ளர், பறையர், அம்பலக்காரர், முத்தரையர், பார்ப்பனர் முதலிய பல குலத்தினரும், தெலுங்கர், மலையாளர், கன்னடர், தமிழர், ஆங்கிலர், இந்தியர், மராட்டியர், சௌராட்டிரர், குசராத்தியர், சமற்கிருதர்…
