செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): இலக்குவனார் திருவள்ளுவன்
(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3 ? தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்காவிட்டால் தமிழ்ப்பகைவர்கள் கை ஓங்கும் என்பது போல் கூறுகிறீர்களே! எப்படி? ஓர் எடுத்துக் காட்டு கூறுங்களேன். # தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தமிழின் சிறப்புகளைக் குறைத்தும் தமிழைப் பழித்தும் பேசியும் எழுதியும் வருபவர்கள்தாம் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் மாநாட்டின் மூலம் தவறான முடிவிற்கு வர வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக மொழியியல் அமர்வில் எழுத்துச் சிதைவு பற்றிய உரை நிகழ உள்ளது. தமிழறிஞர்கள்…
