மாற்றுத் திறனாளிகளைக் காப்போம் – தி.வே. விசயலட்சுமி
மாற்றுத் திறனாளிகளைக் காப்போம்! உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் அருவினையை/சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் அருவினைகள் பல என்றே சொல்லலாம். சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாய் உலகில் பலர் திகழ்ந்தனர்; திகழ்கின்றனர். கண்பார்வையற்ற கிரேக்கக் கவிஞர் ஓமர், இலியம், ஒடிசி போன்ற காவியங்களைப் பாடி இறவாப் புகழ் பெற்றனர். தமிழகத்தில் அந்தகக்கவி வீரராகவர் போன்ற எண்ணற்றோர் தீந்தமிழ்ப் பாக்களைத் தீட்டியுள்ளார். பார்வையற்ற, காது கேளாத, பேச வியலாத பெண்மணி எலன் கெல்லர் ஆடம் என்ற அமெரிக்க…
வட்டுக்கோட்டை இளைஞர்கள் இல்ல மாணாக்கர்களுக்கு உதவி
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு 50 உடைப்பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இனிய வாழ்வு இல்லத்தின் நிருவாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இல்ல மாற்றுத்திறனாளி மாணவர்களான விழிப்புலனற்றோர், செவிப்புலனற்றோர் வாய்பேச முடியாதவர்கள் என 50 இல்லச் சிறார்களுக்கு உரூபா 65000 பெறுமதியான 50 உடைப்பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கபட்டன. அத்துடன் இல்லச் சிறார்களுக்கு சிறப்பு நண்பகல் உணவும் வழங்கபட்டது. [படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப்பார்க்கவும்!]
