கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! – திருத்துறைக்கிழார்
(கக. வழக்கில் வழுக்கள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! இலங்கையில் ஈழத்தமிழர்களைச் சிங்களவர் 1983 – ஆம் ஆண்டு செய்த படுகொலையைப் பார்த்தும் இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தியது முறையா? தமிழ்நாட்டு மீனவர்கட்குப் பயன்பட்ட கச்சத்தீவை இலங்கையரசுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்கட்கு இடையூறு செய்தது சரியா? ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் அடைக்கலம் அடைந்தனர். அவர்களை நன்முறையில் நடத்தாமல் அவர்கள் தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடபடுவதாகக் குற்றம்…
கக. வழக்கில் வழுக்கள் – திருத்துறைக்கிழார்
( க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கக. வழக்கில் வழுக்கள் எழுவாய் தமிழ் மொழி தோன்றிய காலவரையறை இன்னும் தமிழறிஞர்களால் கணிக்கவியலாத புதிராயுளது. உலக மொழிகள் யாவற்றினும் முதல் தாய்மொழியும் தமிழே என மொழி ஆராய்வாளர் மொழிகின்றனர். அத்தகு மொழி, மூவேந்தர்களாகிய சேர – சோழ – பாண்டியர்களால் சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பெற்றது. பாண்டியப் பேரரசு, முத்தமிழ்க் கழகங்கள் மூன்று கண்டு – தமிழைப் பேணிற்று. அவர்கள்…
௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் – திருத்துறைக்கிழார்
(அ. பழமையும் புதுமையும் – திருத்துறைக் கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் வரலாற்று அறிஞர்கள், ஆரியர் மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக இந்தியாவிலுள்ள செழிப்பான சிந்துசமவெளியில் புகுந்தார்கள் என வரலாறு எழுதியுள்ளனர். இன்றுள்ள ஆரியக் குஞ்சுகள், ஆரியர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு வந்ததை எவன் கூரை மீதிருந்து பார்த்தான் என்றும், பிரித்தாளும் சூழ்ச்சி தெரிந்த ஆங்கிலேயர் ஆரியர், திராவிடர் என்று பிரித்து வரலாறு எழுதிவிட்டனர்…
