எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார்
(௬. புலமையார்: அன்றும் இன்றும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? இன்று தமிழரிடையே நிலவும் பண்பாடு, கலவைப் பண்பாடே; தூய தமிழ்ப்பண்பாடன்று! பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவும் அழிந்தோ – அழிக்கப்பட்டோ விட்டன. இன்றைய இலக்கியங்களில் முழுக்க முழுக்க ஆரியப் பண்பாடு அல்லது அயல் பண்பாடு இழையோடியுள்ளது! தமிழ்ப்பண்பாட்டின் சாயை ஆங்காங்கு காணப்படுகின்றது. அதனை நுணுகி ஆராய்ந்து – கண்டு வெளிப்படுத்துவதே அறிவு சான்ற தமிழ்ப் பேரறிஞர்தம் தலையாய கடனாம். அதுவே அவர், தமிழுக்கும்…
௬. புலமையார்: அன்றும் இன்றும் – திருத்துறைக்கிழார்
(ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௬. புலமையார்: அன்றும் இன்றும் ‘புலம்’ என்றால், ‘அறிவு’ எனப்பொருள். அது பல்துறை அறிவையும் குறிக்கும். ஆனால் ஈண்டு யாம் எடுத்துக் கொண்டது தமிழ்ப் புலமை பற்றியதேயாம்.பண்டு தமிழ்ப் புலமை தமிழறிவைப் பெருக்கிக் கொள்வதற்கென்றே பெறப்பட்டது. பிறமொழிக் கலப்பே தமிழில் உண்டாகாத காலம் அது. தமிழ்ப் புலமையாளரும் அன்று மிகக் குறைவு. இன்று போல் அச்சிட்ட நூல்கள் அன்று இல்லை. எழுத்தாணியால் ஓலையில் எழுதப்பட்ட சுவடிகளே இருந்தன. ஓர்…
ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் – திருத்துறைக்கிழார்
(௪. தமிழா உனக்குத் தன்மானமுண்டா? – திருத்துறைக்கிழார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் ‘தமிழில் என்ன இருக்கிறது?’ – இந்த வினா தந்தை பெரியாரவர்களால் எழுப்பப்பட்டது. அது மட்டுமா? தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்பதும் அவரது கூற்றாகும் “இவற்றைச் சொன்னதன் உட்பொருள் யாது?” என்பதே ஈண்டு ஆராயற்பாலது. பெரியாரவர்கள், தமிழின் மீதுள்ள வெறுப்பினால் இவ்வாறு கூறினார்களா? என்றால் இல்லை! இன்றுள்ள தமிழ்நூல்கள் யாவும் – திருக்குறள் உட்பட – மக்கள் பின்பற்றவேண்டிய அறநெறிகளையும், வாழ்க்கை முறைகளையும், போர்…
௪. தமிழா உனக்குத் தன்மானமுண்டா? – திருத்துறைக்கிழார்
(௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௪. தமிழா உனக்குத் தன்மானமுண்டா? கற்பனையில் உண்டான கல்லுருவங்களைக் கடவுள் என்று வணங்கலாமா? அவற்றின் முன் படையலிட்டும், பலியிட்டும், பாலாலும், பன்னீராலும், தேனாலும், சருக்கரையாலும் அக்கற்களை முழுக்காட்டி ஆடை சுற்றி, அணிகலன்பூட்டி, பூச் சார்த்திப் பொட்டிட்டு, மண்டியிட்டு விழுந்து கும்பிடலாமா? உன்னால் செய்ய முடியாத செயல்களை அக்கற்கள் எங்ஙனம் செய்ய முடியும்? அவை பிறர்துணையின்றி அசைய மாட்டா. வைத்த இடத்தைவிட்டு நகர முடியுமா? உனக்கு நன்மையோ…
௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? – திருத்துறைக்கிழார்
(உ. தமிழர் திருமணமுறை – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? கடல் கொண்ட குமரிக் கண்டம் தொட்டு வடபால் எல்லையாம் பனிமலை வரை தமிழர் பரவி வாழ்ந்ததாகப் பண்டைத் தமிழர் வரலாறு கூறுகிறது. உலகுக்கு நாகரிகம் உணர்த்திய பெருமை தமிழர்க்கே உரியது! தமிழ்மொழி ஒன்றே உலகப் பொதுமொழியாக இருக்கக்கூடிய தகுதி பெற்றது என்கிறோம்.திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றே உலக ஒழுக்க நூலாக இருக்கும் தகுதி வாய்ந்தது என்கிறோம். ஆனால், தமிழர்தம் ஆண்டுக்கணக்கு, தமிழ்க்கணக்குகள் தமிழ்ப்பகைவர்களால்…
உ. தமிழர் திருமணமுறை – திருத்துறைக்கிழார்
(க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் உ.தமிழர் திருமணமுறை தொல் பழந்தமிழர் திருமணமுறை தமிழர்கட்கு இன்று புதுமையாகத் தோன்றுகின்றது. ஏன்? ஆரியர் தமிழகம் போந்து விளைத்த சீர்கேடுகளுள் இஃது ஒன்று! தமிழர்தம் மொழி, பண்பாடு, நாகரிகம் முதலியன கெட்டு யாவும் ஆரியமயமாகிவிட்டமையை எத்துணைத் தமிழர் அறிவர்? ஆகவே, பண்டைத் தமிழர் திருமண முறை பற்றி இன்று பேசினால் இற்றைத் தமிழர் ஏற்க மறுக்கின்றனர். ஆரிய முறை அத்துணை ஆழமாகத் தமிழரிடையே வேரூன்றிவிட்டது. பெரியார் ஈ.வெ.ராவும்…
௰க. தமிழ் கற்பிக்க வேண்டிய முறை – வி.பொ.பழனிவேலனார்
(௰. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰க. தமிழ் கற்பிக்க வேண்டிய முறை இன்று தமிழ்நாட்டுத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்ப்பாடம் கற்பிக்கும் முறை தவறானது. ஆங்கிலம் கற்பிக்கும் முறையைப் பின்பற்றியே தமிழும் கற்பிக்கப்படுகிறது. ஆனால், பண்டைக்காலத்தில் தமிழ் கற்பிக்கக் கையாண்ட முறையே தமிழைப் பொறுத்தவரை சரியானதாகும். அம்முறையில் கற்றவர்தாம் பண்டைய புலவர் பெருமக்கள். பிழையின்றி எழுதவும், பேசவும், அம்முறை பெரிதும் உதவியது. ஆனால், இன்றைய முறையில் தமிழ் கற்றவர், புலமைப்பட்டம் பெற்றிருந்தும் பிழையின்றி எழுதத் திணறுகின்றனர். தமிழ் கற்பிக்க, எழுத்துக் கூட்டிப் படிக்கும் முறையே …