116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 116 தமிழில் தொன்மம் என்பது பொருந்தாது. தொன்மக் கதைகள் என்ற பொருளில் இவ்வாறு கூறுகின்றோம். தொன்மக் கதையை இப்பொழுது கூறினால் தொன்மம் என்போமா? வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் நூலை நாம் தொன்மம் என்போமா? தொன்மம் என்று சொல்லப்படுவன எழுதப்படும்பொழுது தொன்மைச் செய்திகளை எழுதவில்லையே! மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். ஆனால், மகாபாரதத்தில் வியாசரும் ஒரு கதை மாந்தர்தானே. அப்படியானால் அவர் கால நூல்தானே இது. எனவே, தொன்மம் என்பது பொருந்தாது. காப்பியம்,…
106.தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டார்கள் – சரியா? 107.சனாதன தருமத்தை ஒழிப்பது என்றால் கலாச்சாரத்தை அழிப்பதாகும் – நரேந்திர (மோடி) சரியா? இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 வியாசர் என்ற செம்படவ முனிவர் வேதங்களை இரிக்கு, யசூர், சாமம் என்று முதன்முதலில் மூவகைகளாகப் பிரித்து வகுத்துள்ளார் என்கின்றனர். அதற்கு முன்னரே தமிழில் நால் வேதம் இருந்தமையால் இவை ஆரிய வேதங்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நன்னெறியான தமிழ் வேதம் எது? தீ நெறியான ஆரிய வேதம் எது? என்பதைப் புரிந்து நாம் பயன்படுத்த வேண்டும். தமிழ் வேதங்களைப் “புரையில் நற்பனுவல் நால் வேதம்” என்கிறார்…
