கட்டுரைதிருக்குறள்

திருக்குறள் உலகிற்குரியது – வ.சுப.மாணிக்கம்

தலைப்பு-திருக்குறள் உலகிற்குரியது :thalaippu_thirukkural_ulagurku_uriyathu

  செயலுக்கு வரும் அறம் கரைவது திருக்குறள்; மக்கள் வாழ வழிவகுப்பது திருக்குறள்; பல நிலை அறம் தழுவியது திருக்குறள்; எந்நிலைய மாந்தரையும் முன்னேற்றுவது திருக்குறள்; உலகு ஒட்டும் நெறிகாட்டுவது திருக்குறள்; ஒருவன் வாழ்க்கை அவனைப் பொறுத்தது என்ற உண்மை அறைவது திருக்குறள்;

செயல், செயல், செயல். சொல்வது செயலுக்கு வரவேண்டும். செயலுக்கு வருமாறு சொல்ல வேண்டும் என்னும் ஓர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உள்ளத்தினர் அப்பெருமகன். ஆதலால் செயலே வள்ளுவம் எனச் செய்க.

திருக்குறள் கருத்து வகையால் உலகமக்கட்கு எல்லாம் உரியது எனினும், மொழிகாரணமாய் நமக்கு உறவுடையது. ஆதலில் அதனை உள்ளவாறு நாம் உணர்தலும், உணர்ந்தவாறு மொழிபெயர்த்து உலகிடைப் பரப்பலும் நம் கடன். ஞாலத் திருக்குறளை உரிய தமிழ் வாயிலாகக் கற்க முயலுமின்! முயலுமின்! என்ற உணர்ச்சியைப் பிறமொழி மாந்தர்க்கு ஊட்டலும் நம் பொறுப்பு.

மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *