க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? – திருத்துறைக் கிழார்

(கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஆ.தமிழர்
க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்?
க. உன் தாய்மொழி பல வகையிலும் உருக் குலைக்கப்படுகிறது.
உ. உன் இனமக்கள் பெயர்கள் தமிழாக இல்லை
௩. உனது நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்படவில்லை! வேற்றுமொழிச் சொற்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதியுளர்.
௪. உனது நாட்டு மக்கள் நாவில் வேற்றுமொழிச் சொற்களே விளையாடுகின்றன. அரசு அலுவலகங்களில் நடைமுறைகள் தமிழில் இல்லை.
ரு. உனது பண்டைய பண்பாடு, வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன.
௬… இந்திய வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் உன் மொழியையும், பண்பாட்டையும் களங்கப்படுத்துகின்றன.
எ. உனது நாட்டுச் செல்வங்கள் (இந்து) கோவில்களில் முடக்கப்பட்டுள்ளன.
அ. உன் நாட்டில் கிடைக்கும் இயற்கைக் கனிவளங்கள் வடநாட்டாரால் சுரண்டிக் கொண்டு போகப்படுகின்றன. உன் நாட்டில் வடவர் குடியேற்றமும், பணி யமர்த்தமும் பெருகுகின்றன.
௯. உனது நாட்டின் வடக்கெல்லை, தெற்கெல்லைகள் அயல் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டன.
க0. உனக்குச் சொந்தமான கச்சத்தீவு, உன்னைக் கேட்காமலே இலங்கைக்கு உரிமையாக்கப்பட்டு விட்டது.
கக. இலங்கையின் வளர்ச்சிக்கு வழிவழியாக உழைத்துக் கொண்டிருந்த பல்லாயிரந் தமிழர்களுக்கு இலங்கையில் குடியுரிமையில்லாமல் செய்துவிட்டது இந்திய அரசு.
கஉ. இலங்கைத் தமிழர், இப்பொழுது இந்திய அமைதி காக்கும் படைகளால், நாள்தோறும் கொல்லப்படுகின்றனர்.
க௩. உன் இனத்தார் பிழைப்பு தேடி, உலகம் முழுவதும் ஓடி, அலைந்து, அல்லல்;படுகின்றனர்.
க௪. அடிமையாக இருந்துகொண்டு ஆட்சி செய்த தமிழக அரசு மூன்று முறை கலைக்கப்பட்டுவிட்டது.
கரு. உனது நாட்டு அரசின் நடவடிக்கைகளைக் (மேற்பார்வையிட) கண்காணிக்க ஓர் ஆளுநரும் அமர்த்தப்பட்டுள்ளார்.
க௬. உனது நாட்டு அரசு வடவர்க்கு மாறுபட்ட செயல்களில் ஈடுபடுமாயின், உடனே கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்படும்.
கஎ. உனது நாட்டை வளங்கொழிக்கச் செய்யும் காவிரிநீர் வரும் தலைப்பில் கருநாடக அரசு ஓர் அணைகட்டித் தடுத்துவிட்டது.
கஅ. அதன் காரணத்தால் உனது நாடு வறட்சியாலும் வறுமையாலும் வாடுகிறது.
க௯. இந்தி மொழி உன் மீது குறுக்கு வழிகளில் சுமத்தப்படுகிறது.
உ0. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் உன் நாடுஎ வர்க்கும் அடிமைப்பட்ட தில்லை..இன்று வட நாட்டுக்கு அடிமையாகி விட்டதே! என்ன செய்யப் போகிறாய்?
“தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை, ஒன்று நம் சிந்தனை” என்று பேசிப் பேசி வடவர்க்குக் கொத்தடிமையாகாதே! உன் முன்னோர் வீரவரலாறுகளைப் படித்துப்பார்!
எனவே கட்சி, மதம், குலம் முதலிய வேறுபாடுகளை விட்டு, ஒன்றுபட்டு, அடிமைத்தளை அறுத்து விடுதலை பெற தமிழ் இன விடுதலைக்கழகத்தில் இணைந்து அறப்போர் புரிந்து வெற்றிவாகை சூடுக! வெல்க தமிழகம்!
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை



Leave a Reply