திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௯. தமிழ்நாட்டில் வடமொழி .. .. பிறமொழி – தமிழ் அகரமுதலி ஏன் தோன்றின?
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ௯. தமிழ்நாட்டில் வடமொழி – தமிழ் அகரமுதலி,ஆங்கிலம் – தமிழ் அகரமுதலி, பிறமொழி –தமிழ் அகரமுதலி ஏன் தோன்றின? தமிழ்நாட்டில் ஆரியர், ஆங்கிலேயர், பிறமொழிக்காரர் முறையே குடியேறியும், ஆட்சி புரிந்தும் வாழும்படி ஏமாளித்தமிழர்கள் விட்டுக் கொடுத்துவிட்டு வீண் காலம் போக்கியதே காரணம். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்று அயர்ந்து இருந்துவிட்டனர் அற்றைத் தமிழர். இற்றைத் தமிழர் பெரும்பாலாரும் அவ்வாறுதான் இருக்கின்றனர். ஆரியர்கள் தமிழ்நாட்டில் குடியேறி…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை?
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை? தமிழருக்கென ஒரு நாடு இல்லை. பலகோடி தமிழர் பிழைக்க வழிவகையின்றி அயல்நாடுகளுக்குச் சென்று அல்லல்படுகின்றனர். தம் தாய்மொழி, பண்பாடு, நாகரிகம் வளம்பெறச் செய்ய வாய்ப்பின்றி இடர்ப்படுகின்றனர். ஏனெனில், நாமெல்லாம் இந்தியர்! அயல்நாட்டார் பலர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். இந்திக்காரர் வந்து தமிழ்நாட்டில் குடியேறுகின்றனர். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர் எவரும் எந்த இடத்திலும் குடியமர உரிமை உண்டென இந்திய அரசியல்…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 3. குமுகாய அமைப்பு, 4.பொருளியல் நிலை, 5.மக்கள் வாழ்க்கை நிலை
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 1.தமிழ்நாடு. 2. மொழி- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை 3.குமுகாய அமைப்பு ஐந்தாயிரம் ஆண்டுகட்குமுன், அஃதாவது முக்கழகக் காலங்களில் இன்றுபோல குலப்பிரிவுகள் (சாதி) இல்லை. ஆரியர் இந்நாட்டில் குடியேறிய பின்னரே பிர்ம, சத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்துமதத்தில் சேர விரும்பாத மக்கள் ஐந்தாம் குலம் (சாதி), “பஞ்சமர்”, “தீண்டப்படாதவர்” என அழைக்கபப்ட்டனர். இவர்களுக்கு முன்கூறிய நான்கு பிரிவினர்களுடன் எவ்வகைத் தொடர்பும் இல்லை….
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 1.தமிழ்நாடு. 2. மொழி
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௬. தமிழ்நாடும் தமிழும் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை 1.தமிழ்நாடு ஐந்தாயிரம் ஆண்டுகட்கு முன் இன்றுமுள்ள குமரிமுனைக்குத் தென்பால் குமரிக்கண்டம் என்றோர் பெருநிலப்பரப்பு இருந்தது. அஃது எழுநூற்றுக் காவதம் பரவியிருந்தது. இன்றுள்ள சுமத்ரா, சாவா, போர்னியோ தீவுகளும் இலங்கைத் தீவும், இலக்கத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், மடகாசுகர் தீவு ஆகியவையும் குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதிகளே! குமரிக்கண்டம் ஐந்துமுறை கடற்கோள்களுக்கு ஆட்பட்டமையால் அழிந்து போயிற்று; அங்குதான் முதல் மாந்தன் தோன்றினான்; அங்கு வாழ்ந்த…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௬. தமிழ்நாடும் தமிழும்
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ௬. தமிழ்நாடும் தமிழும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை நனியும் நலிவுற்றுளது என்பது தெளிவு. ஏனெனில், தமிழ்நாட்டிலுள்ள மக்களின் பெயர்கள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள கடைகளின் பெயர்களும், தொழில் நிறுவனங்களின் பெயர்களும் தமிழாயில்லை. தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கடவுளரின் பெயர்களும் தமிழன்று. கோவில் வழிபாடுகளும் தமிழில் நடத்தப்படவில்லை. இலங்கையிலும், மலேசியாவிலும், சிங்கையிலும் தமிழ் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் தமிழுக்குத்…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௪. எழுக தமிழினமே!
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௩. திராவிட நாடும் தேர்தலும்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ௪. எழுக தமிழினமே! தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை அயல் மாநிலத்தார் பறித்துக் கொண்டன போக எஞ்சியுள்ள குறுகிய தமிழகத்தையும் அண்டையிலுள்ள கேரளம், கன்னடம், தெலுங்கம் மாநிலத்தார் தமிழ்நாட்டில் அவர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளைத் தங்களுக்கு உரிமை கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் தமிழுக்கே உரிய இடம் அளிக்கப்படாத போழ்து, சிறுபான்மையினராக வாழும் அயல் மாநிலத்தார் தங்கள் மொழிகளையும் பயிற்று மொழிகளாக்க முயல்கின்றனர். பெயரளவில் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டில்…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௩. திராவிட நாடும் தேர்தலும்
(உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௩. திராவிட நாடும் தேர்தலும் சென்னை எசு.ஏ.ஏ. திடலில் நடந்த தமிழ் நாட்டுச் சட்டமன்ற (தி.மு.க.) க.து. கட்சி உறுப்பினர்கட்கு அளித்த பாராட்டுக் கூட்டத்தில் திரு. அண்ணாதுரை அவர்கள், “திராவிட நாட்டுக் கொள்கையை நாங்கள் விடமாட்டோம். அதனைச் சட்டமன்றிலும், நாடாளுமன்றிலும் தம்பிகள் வலியுறுத்தத் தயங்கமாட்டார்கள். முப்பத்து நான்கு இலட்சம் மக்கள் திராவிட நாட்டுக் கொள்கையை ஆதரித்தே எங்கட்கு வாக்குகளை வழங்கியுள்ளனர்” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியுள்ளார்….
க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? – திருத்துறைக் கிழார்
(கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? க. உன் தாய்மொழி பல வகையிலும் உருக் குலைக்கப்படுகிறது. உ. உன் இனமக்கள் பெயர்கள் தமிழாக இல்லை ௩. உனது நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்படவில்லை! வேற்றுமொழிச் சொற்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதியுளர். ௪. உனது நாட்டு மக்கள் நாவில் வேற்றுமொழிச் சொற்களே விளையாடுகின்றன. அரசு அலுவலகங்களில் நடைமுறைகள் தமிழில் இல்லை. ரு. உனது…
கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : திருத்துறைக் கிழார்
(கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை ஆரியர் வருகையால் தமிழ் மொழி சிதைந்தது; தமிழர் பண்பாடு மறைந்தது; தமிழர் கணக்கியல் முறை தகர்ந்தது; தமிழர் காலம் கணக்கிடும் முறையும் ஒழிந்தது. இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் கரணியம் தமிழரின் அயல்மொழி, அயல்நாகரிகத்தின்பால் உள்ள ஆசையும், தமிழரின் ஏமாளித்தனமும் எனலாம். இன்றும் அந்நிலையே நீடிக்கிறது.ஏதோ அத்திபூத்தாற்போல, ஆரணி பாண்டுரங்கன் (பெயர் தமிழன்று) போன்ற சில உணர்வாளர் மறைந்தும், மறந்தும் போன தமிழர் நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் முறைகள்…
கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா!-திருத்துறைக் கிழார்
(க௬. தமிழர் செய்ய வேண்டுவன?- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! இலங்கையின் மக்கள் தொகை நூற்று எழுபது இலக்கம். அதில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இருபது இலக்கம். சிங்களர் அரசு 1980 – ஆம் ஆண்டு தமிழின அழிப்புப் பணியில் இறங்கி, பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. ஆண், பெண், சிறார் என்ற வேறுபாடு கருதாது நூழிலாட்டு நடத்தியது. ஈழத்தில் தங்கட்கு விடுதலை வேண்டிப் போராடிய தமிழர் நான்கு பிரிவினராவர். அவர்களுள் விடுதலைப்புலிகள் தீவிரமாகச் செயல்பட்டனர். இக்குழுவினர்க்குத் தலைவர்…
கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: திருத்துறைக் கிழார்
(கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3 ஆயின், ஆப்பிரிக்காவில் வாழும் ‘இந்தி’யர், அமெரிக்கா, இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் உறையும் இந்தியர் (வடநாட்டார்)க்கு ஓர் இடர் என்றால் இந்திய அரசு எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் குற்றமன்றோ? இராசீவு காந்தியின் இறப்பைச் சாக்காக வைத்து தமிழ்மக்களின் விடுதலை உணர்வையும், உயிரையும், பொருட்படுத்தாமல் மானங்காக்க, உரிமைபெறப் போராடும் ஈழத்தமிழரின் வீர உணர்வையும் மழுங்கடிக்க இந்திய அரசும், தமிழக அரசும் பாடுபடுவது நன்றன்று. இதனை முன்வைத்து…
கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார்
(கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3 இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவு இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்! ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் போர் தொடங்கினர். சிங்களர் திணறினர். இலங்கையரசால் தாக்குப் பிடிக்கவியலவில்லை. அமெரிக்கப் படைகள் தங்க இலங்கையில் இடமளிக்க முடிவு செய்தது…
