வெருளி நோய்கள் 836-840: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 831-835: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 836-840
- குமளி வெருளி – Milophobia
குமளிப் பழம் / சீமை இலந்தம் பழம் (Apple) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் குமளி வெருளி.
ஆப்பிள் பழம் என்பது பொதுவாகச் சீமை இலந்தை என அழைக்கப் பெறுகிறது. அரத்த(இரத்த) நிறத்தில் இருப்பதால் அரத்தி என்கின்றனர் சிலர். ஆனால் செவ்வல்லியின் பெயர் அரத்தி. எனவே, இதற்குப் பொருந்தாது. ‘உன்னாம்’ என்றும் ‘குமளி’ என்றும் அகராதிகளில் உள்ளன. பயன்பாட்டுவிவரம் தெரியவில்லை. ஓர் அகராதியில் குறிப்பிடப்படும் சொல் வேறு அகராதிகளில் இருப்பதில்லை. ஏதேனும் ஒரு சொல்லை நாம் பரவலாகப் பயன்படுத்தினால் நிலைத்து விடும். எனினும் குறைந்த எழுத்தில் உள்ள குமளி என்பது இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
Milo என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் குமளி(Apple) எனப் பொருள்.
00
- குமளிச் சாறு வெருளி – Chymomilouphobia
குமளிச் சாறு / சீமை இலந்தைச் சாறு(apple juice) குறித்த வரம்பற்ற பேரச்சம் சீமை குமளிச் சாறு வெருளி.
காண்க: குமளி வெருளி(Milophobia)
00
- குமிழி வெருளி – Ebulliophobia
குமிழி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குமிழி வெருளி.
குமிழ்கள் வரக்கூடிய நீர்மங்கள், சவக்காரம்/ சவுக்காரம்/ சவர்க்காரம்/ வழலை(soap)நீர், அதக்கு பண்டம்(chewing gum) முதலானவற்றைப் பார்த்தாலே பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
ebullio என்னும் இலத்தீன் சொல்லிற்கு நீர்க்குமிழி, கொப்புளம் எனப் பொருள்கள்.
00
- குமிழ் விளக்கு வெருளி – Dengpaophobia
ஒளி விளக்கு / குமிழ் விளக்கு(lightbulb) குறித்த வரம்பற்ற பேரச்சம் குமிழ் விளக்கு வெருளி.
00
- குமுக ஊடக வெருளி – SocialMediaphobia/Socmephobia
குமுக ஊடகங்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குமுக ஊடக வெருளி.
சுட்டுரை வெருளி(Twitterphobia), முகநூல் வெருளி(Facebookphobia), மதிப்புக் கேட்டு வெருளி/ கெடுமதிப்பு வெருளி
(Oppugnophobia(2)) எல்லாம் இணைந்த வெருளியாக இவ்வெருளி உள்ளது. தனிப்பட்ட நிறுவனங்களுக்கும் குமுக ஊடக வெருளி உள்ளது.
நம்முடைய கணக்கில் தவறாக வேறு சிலர் உள்நுழைந்து தவறான தகவல்களைப் பரப்பி கெட்ட பெயர் ஏற்படுத்தித் தருவார்கள் என்ற பேரச்சமும் இருக்கும். நம் கணக்கில் போலித் தளங்களைத் தொடங்கியும் அவப்பெயர் ஏற்படுத்துவார்கள் என்ற பெருங்கவலை இருக்கும்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply