(வெருளி நோய்கள் 1131-1135: தொடர்ச்சி)

பார்வைத்திறன், கேட்புத்திறன் ஆகிய இரண்டுமில்லாதவர்கள் தொடர்பான தொடர்பான பேரச்சம், செவிடர் குருடர் வெருளி.
பார்வைத்திறன் குறைபாடும் கேட்புத்திறன் குறைபாடும் ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் அளவில் இருக்கும். எனினும் இரு திறனும் இன்றிச் செவிட்டுக் குருடராக இருப்பவர்கள் இரங்கத்தக்கவர்கள். அவர்கள், தன்வெறுப்பும் கொள்பவர்களாக உள்ளனர்.
Surdo, caeco ஆகிய இலத்தீன் சொற்களுக்கு முறையே செவிடு, குருடு எனப் பொருள்கள்.
00

செவிடர் தொடர்பான பேரச்சம் செவிடர் வெருளி.
காது கேளாதவர்கள், கேட்பு உதவியை(Hearin Aid) அணிந்து கொள்ளத் தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர். இவர்களிடம் கூறியதையே திரும்பத் திரும்பக் கூற வேண்டி வருவதாலும், தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப எதிர்வினையாற்றிக் குழப்பத்தை ஏற்படுத்துவதாலும், பொறுமையை மறந்து வெறுப்பு கொள்வோர் உள்ளனர்.
Surdo என்னும் இலத்தீன் சொல்லிற்குச் செவிடு எனப் பொருள்.
00

செவ்வகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செவ்வக வெருளி
செவ்வக வடிவிலான அைற, செவ்வக வடிவிலான அரங்கு, செவ்வக வடிவிலான கட்டடம், செவ்வக வடிவிலான பொருள்கள் முதலியவற்றின் மீது காரணமற்ற பகுத்தறிவிற்குப் பொருந்தாத பேரச்சம் வரும்.
கிரேக்கச்சொற்களான ஆர்த்தோ (Ortho(நேராக/வலது) , கோனியா(gonio/கோணம்) என்பதிலிருந்து பெறப்பட்டதே செவவ்கம் என்னும் பொருள்கொண்ட Orthogoniophobia என்னும் சொற்சேர்க்கை.
00

செவ்வணில்(chipmunk) குறித்த அளவுகடந்த பேரச்சம் செவ்வணில் வெருளி.
செவ்வணில், தீங்ஙகு விளைவிக்காத கொறிப்பி (கொறித்துண்ணி). எனினும் இதன் மூலம் தொற்றுநோய்கள் பரவும் பேரிடர் வாய்ப்பு உள்ளது. எனவே, இது கண்டு அஞ்சி வெறுப்பு கொள்கின்றனர்.
00