தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள்:

கார்த்திகை 08, 2049 /சனிக்கிழமை / 24.11.2018

பிற்பகல் 5 மணிக்கு

(635 MIDDLE FIELD SCARBOROUGH இல் அமைந்துள்ள) ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மாவீரர் நினைவுகளோடு பைரவி இசையருவியின் எழுச்சி கானங்களும், கலை நிகழ்வுகளும் நடைபெறும்.

கார்த்திகை 09, 2049 / 25 .11.2018 முதல்  கார்த்திகை 11 / 27.11.2018  வரை, பிற்பகல் 1 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை (24-5210 FINCH AVE (FINCH & MIDDLE FIELD ) இல் அமைந்துள்ள) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பணிமனையில்

மாவீரர் வணக்க நிகழ்வுகள் இடம்பெறும்.

கார்த்திகை 23.11.2018 சைவ ஆலயங்களிலும்,

25.11.2018 கிறித்தவ தேவாலயங்களிலும்

மாவீரர் நினைவு வணக்க வழிபாடுகள் நடைபெறும்.

கார்த்திகை  11 / 27.11.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை

(765 BRITANNIA R.D WEST (HEART LAND) UNIT 2 இல் அமைந்துள்ள

மிசிசெளகா கொடை மையத்தில்(MISSISSAUGA DONOR CENTER இல்)

மாவீரர் நாள் நினைவுகளோடு

குருதிக் கொடை வழங்கப்படும்.

மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளில் இணைந்து எம் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதோடு

அவர்கள் கனவு மெய்ப்பட உறுதி எடுப்போம்.