புதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான

புலமைப்பரிசில் விருது

தமிழ் இனத்தின் புதிய நம்பிக்கை இராகினி. அவரது ஆசிரியர்களுக்குப்

புலமைப்பரிசில் புதிய வெளிச்ச நிதி  நூறாயிரம் உரூபாய்!   

அண்மையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்விற்கான பெறுபேறுகள் வெளியாகின. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாணவி இராகினி தேசிய நிலையில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் தேர்வில் 169 புள்ளிகளைப் பெற்று  தேர்ச்சியடைந்துள்ளார்.

இவர் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் தன் தாய்,  படையினரின் குண்டுதாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர்த் தன் ஒரு கையையும் இனஅழிப்புப்போரில் பறிகொடுத்த குழந்தையாவார் .

விழ விழ எழுந்துவரும் தமிழ் இனத்தின் இன்னுமொரு சான்றாக மக்கள் மனங்களிலும் வரலாற்றின் பக்கங்களிலும் இடம் பிடித்திருக்கின்றார்.

தனியார் வகுப்புக்களுக்குச் செல்ல வசதி இல்லாதிருந்தபோதும் தனது இவ்வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த பாடசாலை ஆசிரியர்களான சிவகரன், துவாரகா ஆகிய இருவருக்கும் பெருநன்றி கூறுவதைக் காணொளியில் காண்கின்றோம். மேலும் தான் அவர்கள் போன்று ஆசிரியராக வருவேன் என்றும் கூறுகின்றார்

கடந்த மூன்று வருடங்களாக நாம் எடுத்துக்கொண்ட புதிய வெளிச்சச் செயற்பாடுகளில் ‘ஆசிரியர்களை வளப்படுத்தல்‘ செயல்திட்டத்தின் தொடர் நிகழ்வாக இந்த ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டிற்குமான ‘நல் ஆசிரியர் விருதினை’ அறிவிக்க இருக்கின்றோம்..

நல் ஆசிரியர் விருதிற்குத் தகுதியான ஆசிரியரை மாணவர்களின் தெரிவில் இருந்தே தெரிந்தெடுக்கக்கூடிய ஒழுங்குமுறையைச் செயற்பாட்டிற்குக்  கொண்டுவருகின்றோம்.

இந்த ஆசிரியர் விருது நிதிக்கு முதல்கட்டமாக 2 பேராயிரம்(மில்லியன்) இலங்கை உரூபா நிதியை நான் வழங்குகின்றேன்  இந்நிதி வருடத்திற்கு நான்கு இலட்சம் வீதம் ஐந்து வருடங்களுக்குத் தொடர்ச்சியாக வழங்குகின்றேன் . மேலும் நண்பர்கள் இத் திட்டத்துக்கு உதவும் பொருட்டுஆசிரியர்களுக்குப் புலமைப்பரிசில் திட்டம் மேலும் அதிகரிக்கப்படும் .

எனது தந்தையும் ஆசிரியர் அவரது விடா முயற்சியான ஆசிரியப் பணியையும் அவரது மாணவர்கள் அறிவார்கள். வட மாகாணக் கல்வி அமைச்சரின் செயலாளராக இருக்கும் அவர் தன்னுடைய 50 வருட ஆசிரியப்பணியில் இருந்து இந்தவருடம் தனது 70 வயதில் ஓவ்வுபெற உள்ளார்.

அவரின் ஆதரவுடனும் அறிவுரைக்கிணங்கவும் இந்த “நல் ஆசிரியர் விருதினை” அறிமுகப்படுத்தி இதன் முதற்கட்டமாக விழ விழ எழும் இனத்தின் வரலாற்றுச் சான்றாகத் தடம் பதித்திருக்கும் வன்னி மண்ணின் மாணவி இராகினியின் ஆசிரியர்கள் இருவருக்கும் ஓர் இலட்சம் உரூபாக்களை வழங்குகின்றோம்.

கடந்த காலப் புதிய வெளிச்சச் செயற்பாடுகள்

1) ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை

2) இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை

3) இயற்கை விவசாய பயிற்சிப் பட்டறை

உலக ஆசிரியர் நாள் வாழ்த்துகள்

#புதிய வெளிச்சம்

நவசீவன் அனந்தராசு

4162728543

வணிகத் தொடர்பிற்கு : www.Biztha.com

(படங்களை அழுத்தின் பெரிய அளவில் காணலாம்.)