மிச்சிகன் பல்கலைக்கழகம்

தெற்காசியப் படிப்பு மையம்

தமிழ் வகுப்புகள் தொடக்கம்

பயில வாரீர்!

அன்புள்ள மிச்சிகன் தமிழ் மக்களே!

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் படிப்பு மையம் ஓர் அரிய வாய்ப்பினை உங்களுக்கு வழங்குகிறது. கடந்த 12 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு தமிழ் பேராசிரியர் மூலம் தமிழ் முறையாகப் பயில ஒரு வாய்ப்பு.

தமிழ்ப் பேராசிரியர் திருமதி வித்தியா மோகன் அவர்களின் வகுப்புகள் மாணவர்களின் சேர்க்கைக்காக தொடங்கப்பட்டுள்ளது.

ஆசிய மொழி / ASIANLAN 255 இரண்டாம் ஆண்டு தமிழ் I

ஆசிய மொழி / ASIANLAN 455 உயர்நிலை தமிழ் I

தமிழ் மொழியின் அடிப்படை அறிந்த எந்த மாணவரும் உயர்நிலை தமிழ்ப் பாடம் தேர்வு செய்து படிக்கலாம்.

தமிழ் பேசும் நாடுகளில் ஆராய்ச்சி செய்யும் அல்லது செய்ய விரும்பும் மாணவர்களும் இந்த வகுப்பில் சேரலாம்.

இந்த வகுப்புகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் யாவரும் சேரலாம்.

இந்த வகுப்புகள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் பேராசிரியர் வித்தியா மோகன் அவர்களை mohanvid@umich.edu மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

மிக்க நன்றி,


தகவல் : மிச்சிகன் தமிழ்ச்சங்கம்

தரவு : செ.இரா.செல்வக்குமார்