(மிசெல் பசேலே )
(மிசெல் பசேலே )

யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கை அரசின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமை அவையின் கண்காணிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

 இது தொடர்பில் ஐ.நா மனித உரிமை அவை ஆணையாளர் மிசெல் பசேலே அம்மையார்(Michelle Bachelet) அவர்களுக்கு எழுதியுள்ள மடலில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் பல தடவைகள் ஐ.நாவுக்கும் அனைத்துலகக் குமுகாயத்திற்கும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதற்கு மாறாகக் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை ஏவிவிடுவதற்கான நிலைமை அங்கு காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

 இலங்கைத்தீவின் தற்போதைய நிலைமைகளில் இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரக்கால நிலையென்பது, தமிழர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படும் நிலைமை அங்குக் காணப்படுகின்றது.

இந்நிலையில் ஐ.நா ஆணையாளர் அவர்கள் இது தொடர்பில் தீவிரகங கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்  எனத் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது மடலில் கோரியுள்ளார்.