வலைத்தமிழ் பல்சுவை மாத இதழ் வெளியீடு, வாசிங்டன்

தமிழ் வளர்ச்சி சார்ந்த ஆக்கப்பூர்வமான அனைத்துச் செயற்பாடுகளையும் இருகரம் கொண்டு வரவேற்று அறிமுகப்படுத்தி வருவது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்.  இச்சங்கம் மிகப்பெரிய அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியில் நடத்திய சித்திரை விழாவில் வலைத்தமிழ் பல்சுவை மாத இதழை வெளியிட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

தமிழ்ச்சங்கத் தலைவர், செயற்குழு , வாசிங்டன் பகுதியிலுள்ள ஆசிரியர் குழு உறுப்பினர்கள், ஆர்வலர்கள், நிகழ்ச்சியை நெறிப்படுத்திய பேரவையின் மேனாள் தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் என அனைவருக்கும் வலைத்தமிழ் ஆசிரியர் குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டது ..

பன்னாட்டுப் பல்சுவை மாத இதழை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி அவர்கள் வெளியிட்டார்.

 வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.நித்திலச்செல்வன், மேரிலாண்ட்டு மாகாணத் திட்ட மற்றும் வெளியுறவுத் துறை மேனாள் துணைச் செயலாளர் முனைவர் இராசன் நடராசன், முனைவர்.பிரபாகரன், முனைவர் முத்துவேல் செல்லையா, திருமதி புட்பராணி , திரு.இராசாராம் சீனுவாசன் ஆகியார் பெற்றுக்கொண்டனர்.

ச.பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ்.காம் 

www.ValaiTamil.com  | www.Facebook.com/ValaiTamil  | www.YouTube.Com/ValaiTamil