வாசிப்புப் போட்டி – 2017 

 

வாசிப்புப் போட்டி 2017

யாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாகப், பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர்.

எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடைகளை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும். கேள்வி கேட்கப்படும் நாளன்று, பொத்தகங்களைப் படித்தாயினும் (நூல்களை வாசித்தாயினும்) விடைகளைத் தயாரித்து அனுப்பமுடியும்.

07/10/2017 தொடங்கி 16/12/2017 வரையான காலப்பகுதியில் எமது களஞ்சியத்தில்(இணைப்பு:-
https://app.box.com/s/odr4wniffpl7ha6e9bx4z1lkfplumtb0/folder/8361103989) “தமிழ்மின்நூல் வெளியீட்டுப் பணி” என்ற கோப்புறையில் (folder) உள்ள நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.

இவற்றில் இருந்து பத்துக் கேள்விகளைப் பொறுக்கி இதே தளத்தில் 17/12/2017ஞாயிறு அன்று இலங்கை – இந்திய நேரப்படி அதிகாலை 12.01 இலிருந்து இரவு 11.59 வரையான காலப்பகுதியில் கேட்கப்படும். இப்பத்துக் கேள்விகளுக்குச் சரியான விடைகளை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும்.

விடை வழங்குவோர் 48 மணி நேரத்திற்குள் yarlpavanang1@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு subject இல் “வாசிப்புப் போட்டி – 2017” எனத் தட்டச்சுச் செய்து, கேள்விகளுக்கான சரியான விடை, போட்டியாளரின் சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.

  புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (Dicovery Book Palace) (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 640/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான Gift Certificates பரிசு பெறும் முதல் மூவருக்குத் தனித்தனியே வழங்கப்படும். இப்போட்டிக்கான பரிசில்கள்01/01/2018 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

யாழ்பாவாணன்  / yarlpavanan