இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்
கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க (பாவேந்தர் பாரதிதாசன்)
தமிழ்க்காப்புக் கழகம்
இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து
இணையவழிக் கண்டனக் கூட்டம்
கார்த்திகை 21, 2051 ஞாயிறு 06.12.2020
காலை 10.00 மணிமுதல்
உங்களையும் பங்கேற்க அழைக்கிறோம்!
மத்திய அரசு நாளும் இந்தி,சமக்கிருதத் திணிப்புகள் மூலம் தமிழ் முதலான தேசிய மொழிகளை அழித்து வருகிறது.
இது குறித்து மேற்குறித்த நாளில் நடைபெறும் கண்டனக் கூட்டத்தில் நீங்களும் பங்கேற்கலாம். கூட்ட இணைப்பு விவரம் பிறகு தெரிவிக்கப்படும்.
ஐந்து நிமிடததிற்குள் பேச அல்லது கவி பாட முன்வருவோர் தங்கள் விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். தங்களுக்கு அறிமுகமான பிறர் பங்கேற்க முன்வந்தாலும் விவரங்களைத்தெரிவிக்கலாம். கவிதையின் வடிவம் மரபு, புததுக்கவிதை, குறும்பா என எவ்வாறும் இருக்கலாம். ஆனால், பிறமொழிச்சொல் கலவாமல் இருக்க வேண்டும்.
மேலும், நிகழ்வின் பொழுது,
“மத்தியஅரசின் இந்தி,சமற்கிருதத்திணிப்புகளுக்கு எங்களின் கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்”
எனக் கூறித் தத்தம் பெயர், அமைப்பு விவரங்களைத் தெரிவிக்கலாம்.
எக்கட்சி அல்லது அமைப்பினராக இருந்தாலும் தமிழ்நலன் நாடுவோர் எனில் பங்கேற்கலாம்.
ஆகா! செம்மையான முயற்சி ஐயா! நனி நன்றி!