சித்திரை 20, 2050 – 2019 மே 3 – காலை 8 மணி முதல்

சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம்

 

ஏன்? 

  • பல்லாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் அரசியல், வரலாறு, பண்பாடு, தாயகம் ஆகியவற்றை தமிழர்களுக்கே உறுதி செய்யும் வகையில்தான் பல போராட்டங்களுக்குப் பிறகு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், தமிழர்களுக்குரிய தாயகமாக “தமிழ்நாடு” அமைக்கப்பட்டது.
  • இன்று தமிழ்நாடு அமைக்கப்பட்ட நோக்கங்கள் சிதைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் – வேலை வாய்ப்பு அனைத்தும் பிற மாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்கள் சொந்த தாயகத்திலேயே ஏதிலியராகும் சூழல் எழுந்துள்ளது.
  • இதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது முதன்மையான தேவை! அதற்கான ஒரு கூட்டு முயற்சியே இந்தப் பரப்புரை இயக்கம்!

எதற்கு?

  • தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90% பணிகள் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
  • திருச்சி பொன்மலை தொடர்வண்டி பணிமனையில் பழகுநர்களாக 300 இந்திக்காரர்களை அமர்த்தியுள்ளதை நீக்கி, அவ்விடங்களைத் தகுதியுள்ள தமிழ்நாட்டு இளை யோருக்கு வழங்க வேண்டும்.
  • இவ்விரு கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இப்பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது.

எப்போது? 

  • சித்திரை 20, 2050 வெள்ளிக்கிழமை மே 3 –தமிழ்நாட்டு நேரப்படி காலை 8 மணி முதல்  அவரவர் தங்கள் சுட்டுரை (Twitter), முகநூல் (Facebook), உடன்வரி/இன்சுட்டா கிராம் (Instagram) முதலான சமூக வலைத்தளங்களில் இக்கோரிக்கைகளை ஆதரித்து எழுத வேண்டும்.

யார்? 

நீங்கள்தான்! தமிழின உணர்வுடன் சமூக வலைத்தளங்களில் இயங்கும் 

நீங்கள்தான் இப்பணியை மேற்கொள்ளப் போகிறீர்கள்! உங்கள் தனிப்பட்ட

சமூக வலைத்தளக் கணக்கிலோ உங்கள் அமைப்பின் கணக்கிலோ

  # தமிழகவேலைதமிழருக்கே,

# TamilnaduJobsForTamils

 ஆகிய 

குறிச்சொற்களைப் (Hashtag) பயன்படுத்தி, நீங்கள் ஒவ்வொரு பதிவும் அரசைக்

கேள்வி கேட்கும்! உங்கள் கடமையை உங்களிடத்தில் இருந்தே நிறைவேற்றுங்கள்! 

சுட்டுரையில் பின்வருவோரை இணைத்துக் கேள்வி கேளுங்கள்!

o    @PMOIndia (PMO of India)

o    @narendramodi (Narendra modi personal account)

  • இந்தியத் தலைமையமைச்சர் அலுவலகம்

o    @RailMinIndia (Ministry of Railways)

  • இந்தியத் தொடர்வண்டித் துறை அமைச்சகம்

o    @GMSouthernrailway (Southern Railways General Manager)

  • தென்னகத் தொடர்வண்டித்துறை பொது மேலாளர்

o    @DRMTPJ (Divisional Railway Manager, Trichy Southern Railways)

  • திருச்சி தென்னகத் தொடர்வண்டித் துறைப் பிரிவு மேலாளர்

o    @CMOTamilNadu (CMO of Tamilnadu)

  • தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம்

மே 3 அன்று காலை 8 மணிக்கு இணைய முடியாதவர்கள் www.twuffer.com என்ற தளத்தில் பதிவு செய்து கொண்டு, உங்கள் சுட்டுரைகளை முன்கூட்டியே பதிவு செய்து, அதை மே 3 அன்று 8 மணிக்கு மேல் தானாகவே வெளியிடச் செய்யலாம்.

#TamilnaduJobsForTamils

#தமிழகவேலைதமிழருக்கே

பரப்புரை குறித்த விளக்கங்கள்

       மே 3 அன்று காலை 8 மணி முதல் நீங்கள் சுட்டுரையில் (Twitter) போடும் ஒவ்வொரு கீச்சிலும் #Tamilnadu-Jobs-For-Tamils, #தமிழக-வேலை-தமிழருக்கே ஆகிய இரு குறிச்சொற்களை இணைத்துப் பதிவிட வேண்டும்.

    சுட்டுரைகளுக்குத் தேவையான தகவல்கள், சட்ட விவரங்கள் அனைத்தும் ஒளிப்படங்களாக – காணொலிகளாக www.facebook.com/tamizhdesiyam முகநூல் பக்கத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதன் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு நீங்களே எழுதலாம்!

  ஒவ்வொரு முறை சுட்டுரை இடும் போது #Tamilnadu-Jobs-For-Tamils என்ற குறிச்சொல்லை எழுத்துப் பிழையின்றி பயன்படுத்துங்கள். அவ்வப்போது, இந்த குறிச்சொல்லை கிளிக் செய்து, அதில் பிறர் எழுதியுள்ள பதிவுகளையும் பார்வையிடுங்கள். அதில் உங்களை ஈர்க்கும் பதிவுகளை மீண்டும்  #Tamilnadu-Jobs-For-Tamils குறிச்சொல்லைப் போட்டுப் பகிருங்கள் (Retweet).

   படங்களை இணைக்கும்போது, நண்பர்களை இணைத்து உங்கள் பதிவுகளை பிறருக்குத் தெரியப்படுத்தி, அவர்களையும் இதில் பங்கேற்கச் செய்யுங்கள்.

     புதிதாக எழுத விருப்பமில்லையெனில் ஏற்கெனவே உள்ள பதிவுகளுக்கு ஒரு பின்னூட்டம் (Comment) (எடுத்துக்காட்டு : சிறப்பு, பாராட்டுகள், அருமை) போட்டுப், பகிரவும்.

     பதிவுகள் போடும்போது மேலே குறிப்பிட்ட அமைச்சகங்களையும், அதிகாரிகளையும் மட்டும் இணைக்காமல் ஊடகங்களையும், ஊடகவியலாளர்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரையும் இணைத்துப் பதிவுகள் போட்டு அவர்களது கவனத்தை ஈர்க்கலாம்.  

  தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் நம் கோரிக்கைகளை வாய்ப்புள்ளவர்கள் பதிவிட வேண்டும். ஆங்கில ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க இது பயன்படும்.

      நீங்கள் சுட்டுரையில் (Twitter) எழுதிய பதிவை, முகநூலில் – உடன்வரி/இன்சுட்டா கிராம் (Instagram)  போன்ற பிற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, நம் பரப்புரைக்கு மேலும் ஆதரவாளர்களை உருவாக்க முயலுங்கள்.

 சுட்டுரை விளக்கங்கள் அனைத்தும் கீழுள்ள கோப்பில் ஆவணமாக உள்ளன. தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்!

https://docs.google.com/document/d/1PQekiUcBGgytTr0V4yxTcckzO0U44R860jA1qxCk_5w/edit?usp=sharing

தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என முழங்குவோம்!

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு மற்றும் தனியார் பணிகளில் 

தமிழர்களுக்கு 90% வேலை உறுதி செய்யக் களமிறங்குவோம்!