தமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு
தமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கக்
கால நீட்டிப்பு
திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, போப்பு மொழிபெயர்ப்பு விருது, பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது / அப்துல்கலாம் தொழில்நுட்ப விருது, ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது / முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது, சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது, தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது, அருணாசலக் கவிராயர் விருது மற்றும் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.
இவ் விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 31 என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. பலரது வேண்டுகோளுக்கிணங்க சூன் 15 வரை விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தகுதியுடையவர்கள்
செயலர், தமிழ்ப்பேராயம், எண் 518, ஐந்தாம் தளம், பல்கலைக்கழக நிருவாகக் கட்டடம்,
எசு.ஆர்.எம். அறிவியல் – தொழில் நுட்பக் கழக நிறுவனம், காட்டாங்குளத்தூர் – 603 203
என்ற முகவரிக்குத் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 044 2741 7379 – இல் தொடர்பு கொள்ளவும்.
Leave a Reply