மின் புத்தகம் வெளியிடும் அன்பர்களே!

வணக்கம்

 குவிகம் இணையவழி அளவளாவலில் குவிகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் மறு அறிமுகம் செய்துவருகிறோம். புத்தககங்கள் மின்புத்தகமாக கிடைக்கின்றனவா என நண்பர்கள் பலர் கேட்டிருந்தார்கள்.

 இது குறித்த தகவல்களோடு நண்பர்கள் எழுதியுள்ள மற்ற  மின்புத்தகங்களைப் பற்றிய விவரங்களையும் அளிக்க ஒரு நிகழ்வு நவம்பர் முதல் நாள் நடக்கவிருக்கிறது. புதியதாக வெளியிட விரும்புபவர்களுக்கும் சில பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கவும் விரும்புகிறோம்  மின் புத்தகங்களை வாசகர்களிடம் சேர்ப்பிப்பதற்கான ஒரு சிறு முயற்சியே இது.

 உங்களது மின் புத்தகங்களைப்பற்றிய தகவல்களைப் பின்வரும் படிவத்தில் அனுப்பிவைக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

     https://forms.gle/5ucknEivmjddv3Tt5 

 மின்புத்தகங்கள் வெளியிட்டுள்ள மற்ற நண்பர்களுக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பி அவர்களும் கலந்துகொள்ள உதவுங்கள்!

 ஒரே ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளவர்கள் படிவத்தின்  முதல் நான்கு பிரிவுகளிலும்  அடுத்து / ‘NEXT’ பயன்படுத்தி ஐந்தாவது பக்கத்தில் உள்ள அளி / ‘SUBMIT’ பயன்படுத்தவும்.

ஒரு படிவத்தில் ஐந்து புத்தகங்களைப் பற்றிய விவரம் அனுப்பலாம். தேவைப்பட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட படிவங்கள் நிரப்பி அனுப்பலாம்.

 படிவங்களை 24.10.2020 மாலைக்குள் பதிவுசெய்யவும்.

 அமேசான் புத்தகங்களுக்கு இணைப்பு https://www.amazon.in/dp/???????????

என்று கொடுக்கலாம்  (உங்கள் bookshelf பக்கத்தில் ASIN  என்று காணப்படும் பத்து எழுத்துகளை கொடுத்தால் போதும்.  எடுத்துக்காட்டாக

 https://www.amazon.in/dp/B08KRHFML2)

இணைப்புகள் நீளமாக இருந்தால் bitly.com இணையதளத்தின் ‘shorten link’ பயன்படுத்தலாம்

 உங்கள் ஐயங்களுக்கு மின்னஞ்சலில் (ilakkiyavaasal@gmail.com) தொடர்பு கொள்ளவும்.

 அன்புடன்  கிருபானந்தன் , குவிகம் இலக்கியவாசல்