வெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு!
வெருளி அறிவியல் – உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு!
அன்புசால் தமிழார்வலர்களே!
வணக்கம்.
‘வெருளி அறிவியல்’ என்னும் என் நூலை நான் ஊக்குவிப்பு வெளியீட்டகமான கிண்டில் வெளியீட்டகத்தில் பதிந்துள்ளேன்.
உலக மொழிகளில் தாய்மொழியிலான முதல் வெருளி நோய்க் கலைச்சொல் விளக்க அகராதியாகவும் விக்கிப்பீடியாவில் கூட இல்லாத அளவுக்கு மிகுதியான வெருளிக் கலைச்சொற்களைக் கொண்ட பெருந்தொகுப்பாகவும் இந்நூல் உருவெடுத்துள்ளது.
மருத்துவத் துறையினருக்கும் மருத்துவம் சார் துறையினருக்கும் அறிவியல் ஆர்வலர், கலைச்சொல் ஆர்வலர், தமிழ் ஆர்வலர் ஆகியோருக்கும் பொது அறிவு நூல்களை விரும்புவோருக்கும் ஏற்ற நூலாக இது திகழும் என நம்புகிறேன்.
ஈராயிரத்திற்கும் மேற்பட்ட வெருளிச்சொற்கள் விளக்கங்களுக்கான கலைச்சொற்கள் அட்டவணைகள் தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் – தமிழ் என இரு வகைகளிலும் அளிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள அன்றாடக் கலைச்சொற்களுக்கான அட்டவணைகளும், ஒலி பெயர்ப்புச் சொற்களுக்கான அட்டவணைகளும் தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் – தமிழ் என இரு வகைகளிலும் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, அறிவியல் ஆர்வலர்கள், சொல்லாக்க ஆர்வலர்கள் மகிழும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது எனலாம். சொல் தொடர்பான சொல்லாய்வு, சொல், சொற்களம் முதலான பல்வேறு குழு உறுப்பினர்களும் தமிழ் ஆர்வலர்கள் நிறைந்துள்ள வல்லமை, தமிழ் மன்றம், தமிழமுதம், தமிழ்ச்சிறகுகள், புதுவை வலைப்பூவினர், தமிழ் உலகம், தமிழர் பறை, தெய்வத்தமிழ், மின்தமிழ், தோழமை முதலான பல்வேறு மடலாடல் குழுக்களினரும், ஊடகத்தினரும் இதனை வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்.
இதன் விலை உரூ 1500/- என்பது உழைப்பு நோக்கில் மிகவும் குறைவே! அ 4 பக்க அளவில் கணியச்சிட ஒரு பக்கத்திற்குக் குறைந்தது உரூ.40 அளிக்க வேண்டியுள்ளது. 2000இற்கு மேற்பட்ட படங்கள் பதிப்பிட மேலும் தனிக்கட்டணம். கணிணி பயன்பாட்டு நேரம் அடிப்படையில் இன்னும் கட்டணம் மிகுதி. பல ஆண்டுகள் உழைப்பில் உருவான இந்நூலின் குறைந்த அளவு விலைதான் இது. கல்வி நிறுவனங்களும் தமிழ் அமைப்பினரும் அறிவியல் அமைப்பினரும் இதை வாஙகுவது எளிதே! பல வெளிநாட்டுப் பண மதிப்பில் இத் தொகை மிகவும் குறைவே. எனவே கணிணியில் அமேசான் பக்கம் அல்லது அலைபேசியில் கிண்டில் செயலிக்குச் சென்று இலக்குவனார் திருவள்ளுவன் என்றோ வெருளி அறிவியல்’ (Science of Phobia) என்றோ தேடி இந்நூலைப் பதிவிறக்கம் செய்து ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்.
விலைக்கு வாங்க வாய்ப்பு இல்லாமல் ஆனால், படிக்க வேண்டும் என விழையும் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
இந்திய நேரப்படி வரும் மார்கழி 13, 2050 / ஞாயிற்றுக்கிழமை /29.12.2019 அன்று நண்பகல் 1.30 மணி முதல் மார்கழி 15, 2050 / செவ்வாய்க்கிழமை / 31.12.2019 நண்பகல் 1.29 முடிய இதனை விலை கொடுக்காமல் கிண்டில் குறுஞ்செயலியில் (Kindle app) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்படி இலவயக் காலம் முடிந்த பின்னரும் கிண்டில் வரையிலி (Kindle Unlimited) திட்டத்தின் கீழ்த் தொடர்ந்து நூலை நீங்கள் இலவயமாகப் படிக்கலாம். கணினி உலவி (browser) வழியே வாங்க https://amzn.to/2PYD4T2 எனும் இணைப்புக்குச் செல்லலாம். நூலை வாங்குதல் குறித்த மேலும் விவரங்களை இந்த இணைப்பில் காணலாம் . < இணைப்பு >
மேலும், கிண்டில் வெளியீட்டகத்தின் பதிப்பிற்கான படைப்பு 2019 (Pen to Publish 2019) என்னும் திட்டத்தில் எனக்குப் பரிசு கிடைக்க வேண்டும் எனில் வரும் திசம்பர் 31, 2019 அன்றைக்குள் மிகுதியானவர்கள் நூலை விலை கொடுத்தோ இலவயமாகவோ வாங்கிப் படித்துக் கருத்துரைத்திருக்க வேண்டும். பக்கத்திற்குச் சில வரிகளை அச்சிடும் கவிதை நூலிற்குக் கிடைக்கும் வரவேற்பு இதுபோன்ற நூலுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, வாங்கும் வாய்ப்புள்ளவர்கள் வாங்கி ஊக்கப்படுத்துமாறும் பிறர் இலவயப் பதிப்பைப் பதிவிறக்கம் செய்தோ இலவயத் திட்டமான கிண்டில் வரையிலியின் (Kindle Unlimited) கீழோ படித்துத் தத்தம் கருத்துகளைப் பதியுமாறும் வேண்டுகிறேன்.
நிறைகளைத் தளத்தில் பதியுங்கள்!
நிறைகாண வேண்டிய குறிப்புகளை என்னிடம் தெரிவியுங்கள்!
நனி நன்றி
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
https://www.amazon.in/kindleapps தளத்திற்கு சென்று, கணினி / கைபேசி செயலிகளை பதிவிறக்கம் செய்து – நிறுவி பயன்படுத்தவும்.
http://read.amazon.in என்ற தளத்தில் செயலிகள் இன்றி இணைய உலாவி மூலமாகவும் கணினிகளில் படிக்கலாம்.