இலக்குவனாரின் ஐம்பதாவது நினைவாண்டில் மாணாக்கருக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள்

இலக்குவனார் நடுநிலைப்பள்ளி, வாய்மைமேடு

உலகத்தமிழாராய்ச்சி மன்றம், அமெரிக்கக் கிளை

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ்க் காப்புக் கழகம்

உலகளாவிய போட்டிகள்

இனிய தமிழ் பேசும், எழுதும் குழந்தைகளின் திறமையை வெளிக்காட்ட ஓர் அரிய வாய்ப்பு!

மொத்தம் 24 ஆயிரம் உரூபாய்ப் பரிசுத் தொகை. – 4 பிரிவுப் போட்டிகள்

பரிசு விவரம்: ஒவ்வொரு பிரிவிற்கும்

முதல் பரிசு உரூ.3000/-

இரண்டாம் பரிசு உரூ.2000/-

மூன்றாம் பரிசு உரூ.1000/-

என நான்கு பிரிவுகளுக்கும் வழங்கப் பெறும்.

அனைத்துப்போட்டிகளுக்குமான பொதுத் தலைப்புகள்

தமிழைப் படிப்போம்! தமிழில் படிப்போம்!

அல்லது

தமிழ்ப்போராளி இலக்குவனார்

1.)ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பேசும் நேரம் 4 நிமையம்

2.) ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பேசும் நேரம் 5 நிமையம்

3.) ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பேசும் நேரம் 6 நிமையம்

4.) 9-12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மட்டும் கட்டுரைப்போட்டி.

தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள பள்ளி மாணாக்கர்கள் பங்கேற்கலாம்.

கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர் 4 பக்க அளவில் தம் கைப்பட எழுதி, ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர் மேலொப்பத்துடன் பெயர், வகுப்பு, பள்ளி விவரங்களுடன் பின்வரும் மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.

ilakkuvanarvoimedu@gmail.com.

 பேச்சுப்போட்டியில் பங்கேற்போர் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரி , தலைப்பு விவரங்களைத் தெரிவித்து விட்டுப் பேச வேண்டும். பேச்சுப்பதிவிற்கான காணொளியை

ஆசிரியர் மணிமொழி(போட்டி ஒருங்கிணைப்பாளர்) பகிரி எண்(WhatsApp) 88 830 80 830 இற்கு அனுப்ப வேண்டும்.

தங்களின் பதிவு 24.08.23  முதல் 10.09.23 வரை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

நடுவர்களின் முடிவே இறுதியானது.

 வெற்றி பெற்றவர்களுடைய விவரம் பேராசிரியர் இலக்குவனார் அவர்களுடைய நினைவு நாளான செட்டம்பர் 3 அன்று (WhatsApp) மூலம் வெளியிடப்படும்.

வெற்றியாளர்களுக்கு 15.09.23 அன்று பரிசுத்தொகை  அனுப்பப்படும். பரிசு அனுப்புவதற்குரிய கூகுள் எண் அல்லது அதுபோன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் பின்னர்  வழங்கப்படும்.  

பேரா.சி.இலக்குவனார் குறித்த வரலாற்றுக் கட்டுரைகளை, நூல்களை இலக்குவனார் இணையத் தளத்திலும்(http://ilakkuvanar.com/) அகரமுதல இதழ்த்தளத்திலும்(http://www.akaramuthala.in/) காணலாம்.

பங்கேற்பாளர்களுக்குப் பாராட்டுகள்! வாகை சூட வாழ்த்துகள்!

இலக்குவனார் திருவள்ளுவன்              அரசர் அருளாளர்                      சூ. சார்லசு

          ஒருங்கிணைப்பாளர்                                     தலைவர்                          தலைமை ஆசிரியர்

இலக்குவனார் இலக்கிய இணையம்     உலகத் தமிழாராய்ச்சி  மன்றம்       இலக்குவனார்   நடுநிலைப்பள்ளி