தலைப்பு-இலங்கை இசுலாமிய இலக்கிய ஆய்வகம் ;thalaippu_islamiyaaayvakam

இலங்கை இசுலாமிய இலக்கிய ஆய்வகம்

இவ்வருட இறுதிக்குள்

உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை

நடத்தவுள்ளது.

 

 இவ்விழாவை முன்னிட்டு நடத்தப்படவுள்ள ஆய்வரங்குகளுக்கான கட்டுரைத் தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

 கட்டுரைகள் கிடைப்பதற்குரிய இறுதி நாள் :

புரட்டாசி 16, 2047 / செப்டம்பர் 30, 2016

கட்டுரைகளை எழுதுவதற்கும் பங்கேற்பதற்கும் தேச இன வரம்புகளில்லை.  கட்டுரைகள் ஒரு குழுவினரால்  ஆய்விடப்பட்டுச் சிறந்தவை ஏற்றுக் கொள்ளப்படும்.

 

கட்டுரைத் தலைப்புகள். 

01. தற்கால இலக்கியம்

01. முசுலிம் படைப்பாளிகளின் வலைத்தளப்பதிவுகள்
02. 1970 களின் பின்னரான முசுலிம் படைப்பாளிகளின் கவிதைச்செல்நெறி
03. 1970 களின் பின்னரான முசுலிம் படைப்பாளிகளின் சிறுகதைச்செல்நெறி
04. 1970 களின் பின்னரான முசுலிம் படைப்பாளிகளின் புதினங்களும் பேசுபொருளும்
05. 1970 களின் பின்னரான முசுலிம் படைப்பாளிகளின் இலக்கியக் கட்டுரைகளும் பேசு பொருளும்

02. இசுலாமும் கலைகளும் 

01. இலங்கை முசுலிம்களின் இசையும் கலைப்பரம்பரையும்
02. இலங்கையில் அருகி வரும் முசுலிம் பரம்பரைக் கலை வடிவங்கள்
03. இறைத்தூதர் காலத்தில் இசையும் கலையும்
04. அடிப்படைவாதச் சிந்தனையும் இசுலாமிய இசையும்
05. கசீதா, புர்தா, தலைப் பாத்திஃகா ஆகியவற்றில் இலக்கிய நயம்
06. இசுலாமியர் மத்தியில் இசைபற்றிய வாதங்கள் அடிக்கடி ஏற்படுவதற்கான காரணங்கள்

03. திரைப்படம் பற்றிய இசுலாமியக் கண்ணோட்டம் 

01.) திரைப்படச் சுவைபற்றிய எண்ணக்கரு
02) இசுலாமியக் கருத்தியலை முன்கொண்டு செல்ல திரைப்பட ஊடகத்தின் பங்களிப்பு
03) திரைப்படம் தொடர்பில் இலங்கையில் ஒரு படைப்பாளி எதிர்கொள்ளும் கருத்தியல்சார் சிக்கல்கள்
04) திரைப்படம் மூலம் இசுலாமிய அடையாளங்களைக் கேள்விக்குட்படுத்தல்
05) திரைப்பட ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இசுலாம்பற்றிய பயங்கரவாத மாயை
06.) மாற்று த் திரைப்படத்திற்கான தேவைப்பாடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதைப் பயன்படுத்தலும்

 04. எதிரெழுத்து 

01) முசுலிம் படைப்பாளிகளின் எதிரெழுத்தில் தொனிக்கும் வாழ்வியல் சிக்கல்கள்
02) முசுலிம்களின் எதிர்க்குரல் அனைத்துநாடுகளுக்கும் எட்டாமைக்கான காரணிகள்
03)  கல்லறைகளின்(மீசான் கட்டைகளின்) மீள எழும் பாடல்கள் – சமூக அரசியல் பரிமாணம்
04) செருசலவிய (Zionist/சியோனிய) ஆற்றல்களுக்கெதிரான இசுலாமிய எதிர்ப்பிலக்கியம்
05. இசுலாமியத் தீவிரவாதம் – ஓர் ஆய்வு

05. வாழும் ஆளுமைகள் 

கவனத்தைக் கவர்ந்த தற்கால முசுலிம் படைப்பாளிகள் (ஓர் ஆளுமை மேற்குறித்த 5 சிறு தலைப்புக்களின் கீழும் ஆய்வுக்குட்படல் வேண்டும்)
01) அவர்களது ஆளுமையும் தனித்துவமும்
02) அவர்களது சமூகவியற்பார்வை
03) அவர்களது எழுத்துகளில் இலக்கிய நயம்
04) அவர்களது எழுத்துகளில் சமூக, இன நல்லுறவு.

05) மக்களின் வாழ்வியலை அவர்கள் பேசும் வகை

06. சமூக நல்லிணக்கம்

01) சமய இலக்கியங்களில் சமூக நல்லிணக்கம்
02) இன உறவைக் கட்டியெழுப்புவதில் இலக்கியத்தின் பங்களிப்பு
03) தமிழ் பேசும் மக்கள் – ஓர் இலக்கியப்பார்வை
04) மலையக இலக்கியப்பரப்பில் முசுலிம் படைப்பாளிகளுக்கான அங்கீகாரம்
05) இசுலாமும் இலக்கியமும் – இளந்தலைமுறைப் படைப்பாளிகளின் புரிதலும்.

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:

jinnahsherifudeen@yahoo.com