சங்கம் 4 தென்மதுரைத் திருவிழா, மதுரை
ஆவணி 20-27, 2046 / செப். 06-13, 2015
அன்புடையீர்,
வணக்கம்
மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தொடங்கிய நற்றமிழ் முயற்சியே சங்கம்4. குறுகிய காலத்தில் நன்கே ஆழப்பட்டு அழகுடன் மதுரையில் இப்போது விரிகிறது. தமிழ் கூறும் நல்லுலகெங்கும் அறிவு-கலை-பண்பாடு மறுமலர்ச்சி இயக்கமாய் இது வளரவேண்டுமென்பது எம் அவா. வெற்று முழக்கங்களும் வீண் பெருமிதங்களும் தவிர்த்து உண்மையான நமது பண்பாட்டு வேர்களைத் தேடுவதில் சங்கம்4 அக்கறை செலுத்தும். இதனூடே மேடைத்தமிழின் அழகியலையும் செதுக்கும். தமிழ் மொழி மீதும், தமிழ்ச் சமூகம் மட்டிலும் கொண்ட அளவிலா அன்பின்பாற்பட்டே இதனை ஏற்பாடு செய்கிறோம். அறைகூவல்கள் பல இருந்தபோதும் சலிப்படையாது முன் செல்கின்றோம்.
நிகழ்வுகளுக்கு வந்து எம்மை ஊக்குவித்தருளுங்கள். உங்களுக்கும் அறிவுணவு அருந்திய அக நிறைவு கிட்டும். உங்கள் நட்பு வட்டத்தினர், அறிமுகமானவர்கள் யாவருக்கும் சங்கம் 4 நிகழ்ச்சி விபரங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.
நன்றி.
செகத்து கசுபர் இராசு
Leave a Reply