நாள்: ஆவணி 22, 2045 / 07-09-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு.

இடம்: சாதனா அறிவுப்பூங்கா,

தளம் எண் 367, 32 ஆவது தெரு,

6 ஆவது பகுப்பு, க.க. நகர், சென்னை

தொடர்புக்கு: 72998 55111 & 98406 98236

திரையிடப்படும் படம்: The Way Home

 azhai-childrens_cinema_festival02

  நண்பர்களே, சிறுவர்களின் திரைப்படச்சுவையை வளர்க்கும் வகையில் தமிழ்ப்பட நிலையம், சாதனா அறிவுப்பூங்கா இணைந்து நடத்தும், சிறுவர்களுக்கான திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று சென்னை க.க. நகரில் நடைபெற்று வருகிறது.

 திரைப்படங்கள் வெறுமனே கேளிக்கைக்கான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றன. அதிலும், பிம்பங்களைத் தமிழ்த்திரைப்படம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீரழித்திருக்கிறது. குறிப்பாகக் குழந்தைகளின் அகஉலகில் நுழைந்து அவர்களின் ஒட்டுமொத்த பிம்பங்கள் சார்ந்த சிந்தனையையும் தொலைகாட்சி முதலான பிற ஊடகங்கள் அழித்துவிட்டன.

   இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளின் திரைப்படச்சுவையையும், திரைப்படம் சார்ந்த புரிதலையும் வளர்க்க இந்த மாதிரியான திரையிடல் தேவைப்படுகிறது.

  நண்பர்கள் தவறாமல் தங்கள் குழந்தைகளையும், பக்கத்து வீட்டுக் குழந்தைகளையும், சொந்தக்காரர்களின் குழந்தைகளையும் சேர்த்து இந்தத் திரையிடலுக்கு அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  சிறுவர்கள் திரைப்படம் பார்த்துச் சீரழிந்து போய்விடுவார்கள் என்கிற தவறான அணுகுமுறையை இதற்கு மேலும் உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

  உங்கள் குழந்தைகளை ஏற்கெனவே தொலைகாட்சிப் பெட்டியும், தமிழ்த்திரைப்படங்களும் சீரழித்து அவர்களின் அக உலகை நாசப்படுத்திவிட்டன. அதில் இருந்து மீட்டு அவர்களின் அக உலகையும், அவர்களுக்கான பிம்ப அறிவையும் கொடுப்பதே இந்தத் திரையிடலின் நோக்கம்.

  ஒவ்வொரு மாதமும், முதல் ஞாயிறு மட்டுமாவது உங்கள் குழந்தைகளுக்குத் தொலைகாட்சிப் பெட்டியிலிருந்து விடுதலை கொடுங்கள்.

அவர்களுக்கான உலகை அவர்களே கண்டடைவார்கள்.

அனைவரும் வருக… கட்டணம் இல்லை. (அனுமதி இலவசம்.)

ஒருங்கிணைப்பு: தமிழ்ப்படநிலையம் & சாதனா அறிவுப்பூங்கா.

https://www.facebook.com/events/1495142514059204

அல்லது

https://www.google.com/calendar/event?eid=ZjFxcTBlNG9lajBibjliZjA5ZnZlMXVxN28gNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw