அன்புடையீர்,

வணக்கம்.

மாசி 15, 2048 / திங்கட்கிழமை / 27-02-2017  காலை 10 மணி முதல் மதியம் 1. 30 மணிவரை,

முனைவர் எம்ஞ்சிஆர். சானகி மகளிர் கலை- அறிவியல் கல்லூரி அரங்கில்,

சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை –  முனைவர் எம்ஞ்சிஆர். சானகி மகளிர் கலை -அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் சிலப்பதிகாரப் பெருவிழா நடைபெறவுள்ளது.

  நீதியரசர் வள்ளிநாயகம், நயவுரைநம்பி முனைவர்  செகத்துரட்சகன், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பமை திருச்சி சிவா,பழனி  சி. பெரியசாமி, தாளாளர் திருமதி இலதா  இராசேந்திரன், கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், பேராசிரியர் திருமதி அபிதா சபாபதி, திரு. தி.க.ச.. கலைவாணன் முதலானோர் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்.

  ம.பொ.சி. குடும்பத்தினர், பேராசிரியர்  மு‌னைவர் கா.செல்லப்பன், பேராசிரியர் தி. சு. நடராசன் ஆகியோர்க்கு இளங்கோ விருதும், செல்வன் கோ.சரவணன், செல்வி கோ.சு.சிம்ஃகாஞ்சனா, செல்வன் அருணை மா.மதன்குமார், செல்வி ஆர். கீர்த்தனா ஆகியோர்க்கு இளைய சிலம்பொலி விருதும் இவ்விழாவில் வழங்கப்பட உள்ளன.

தங்கள் வருகையால் விழாவினைச் சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்,

மணிமேகலை புட்பராசு

செயலாளர்,

சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை