azhai-silambaaru

  ஆறு, சிற்றாறு, காட்டாறு, கிளையாறு, துணையாறு என்பதெல்லாம் என்ன? மதுரையில் எத்தனை ஆறுகள் உள்ளன? காடு அழிப்பினாலும், மணல் கொள்ளையாலும், தண்ணீர் வணிகத்தாலும் நம் ஆறுகள் பாலைவனமாக்கபடுகின்றன. நாம் பல ஆறுகளை மக்களுக்கு இன்னும் வெளிச்சபடுத்தவே இல்லை. மதுரையில் 10க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளமை நமக்கு தெரியுமா? வாருங்கள் அறிந்து கொள்வோம். நீராதாரங்கள் குறித்து மக்களோடு உரையாட உலகத் தண்ணீர் நாளன்று (22.03.15, ஞாயிறு) “ஆறுகளைத் தேடி” என்கிற பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். இந்தப் பயணத்தின் வழி மதுரையின் ஆறுகளை கண்டடைவோம் வாருங்கள்.

   சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சிற்றாறு குறித்துத்தான் நாம் முதலில் காணப் போகிறோம். அதுதான் அழகர் மலையில் உறபத்தியாகும் சிலம்பாறு. வாருங்கள் சிலம்பாறு அறிவோம்.

 கூடும் இடம்: அழகர் கோவில் நுழைவாயில், அழகர் மலை, மதுரை.

நேரம்: காலை 7.30 மணி

நாள்:   பங்குனி 8, 2046 / 22.03.15, ஞாயிறு

தொடர்புக்கு: 8608266088

 நாணல் நண்பர்கள் & தண்ணீர் இயக்கம்