சி.பா.ஆத்தித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகத்தின் நாட்டுப்புற வழக்காற்றுக் கருத்தரங்கம்
சி.பா.ஆத்தித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகத்தின்
நாட்டுப்புற வழக்காற்றுக் கருத்தரங்கம்
தமிழ் ஆய்வுலகின் நண்பர்களுக்கு, வணக்கம்.
சி.பா.ஆதித்தனார் இதழியல் கழகம் தற்போது சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் என்று மாற்றப்பட்டுள்ளது. ஆய்வுக் கழகத்தின் முதல் கருத்தரங்க நிகழ்வு “நாட்டுப்புற வழக்காறு – தற்காலத் தமிழிலக்கியங்களில் வட்டார வழக்கு” என்னும் பொருண்மையில் 2016 ஆகத்து இறுதி வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு கல்வி சார் அமைப்புகளுடன் இணைந்து இந்தக் கருத்தரங்கம் நடைபெறும். இடம், நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
இக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வழங்க விரும்புவோர்
1. பெயர்
2. கல்வித் தகுதி
3. கட்டுரைத் தலைப்பு
4. பணியாற்றும் நிறுவன முகவரி
5. தொடர்பு முகவரி
6. மின்னஞ்சல் முகவரி‘
7. அலைபேசி எண்
போன்ற விவரங்களை tamilthinai@gmail.com என்னும் என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கருத்தரங்கம் தொடர்பான அனைத்து விவரங்களும் முத்துக்கமலம் இணையத்தளத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
தமிழ் இணைப்பேராசிரியர்
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி
திருச்சிராப்பள்ளி – 2.
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
Leave a Reply