செந்தமிழ்க்கோயில் அமைக்க உதவி வேண்டல்!
அன்புடையீர் வணக்கம்!!!
தமிழ்நாட்டில் தமிழ் தழைத்தோங்கி இருந்த நிலை மாறி இன்று தமிழ் தலை தொங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கண்ணுதற் பெருங்கடவுளும், மூவிரு முகங்கள் கொண்ட கந்தவேளும் தலைமை தாங்கி வளர்த்த தமிழுக்கு இந்த நிலை… அதிலும் அந்த பரம்பொருளை வழிபடும் கோயில்களில் தமிழுக்கு இடமில்லை… என்ன அவலம்!!!!
கேட்டால் நீங்கள் வேண்டுமானால் தமிழ் வழிபாட்டிற்கென்று தனியே ஒரு கோயில் கட்டிக்கொள்ளுங்கள் என்கிறது தமிழ் எதிர்பாளர்களின் குரல்…
அப்படிச் செய்தால்தான் என்ன? தமிழன் எழுச்சி கொண்டு இதனை செய்து முடித்தால் தமிழ் வழிபாட்டிற்கு எதிர்க்குரல்தான் இனியும் எழுந்திடுமோ?? என்ற எண்ணத்தின் உந்துதலால்,
எங்கள் ஐயா, செந்தமிழ் வேள்விச் சதுரர், தமிழ் வழிபாட்டுப் போராளி, தமிழ் ஆகம அறிஞர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள்,
சென்னையில் முற்றிலும் தமிழே முழங்கும் செந்தமிழ்க் கோயில்
ஒன்றை எழுப்ப ஆய பணிகளை உலகத் தமிழர்களின் ஆதரவோடு தொடங்கி உள்ளார்…
அதன் தொடர்பாக இதே எண்ணம் கொண்டு உலகின் பல பகுதிகளில் பரவி உள்ள தங்களை போன்ற தமிழன்பர்களிடம் அவர் விடுத்துள்ள விரிவான விண்ணப்பத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
தாங்கள் மனமுவந்து இந்த அரிய முயற்சிக்கு உதவ வேண்டுகின்றோம். மேலும் இதனைத் தாங்கள் அறிந்த நட்பு வட்டத்தில் பகிர்ந்திடவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்…
இப்படிக்கு,
என்றும் மாறா அன்புடன்…
ச.திருச்சுடர் நம்பி
(சத்தியவேல் முருகனாரின் மகன்)
Leave a Reply