தலைப்பு - தனித்தமிழ் நூற்றாண்டு ;thalaippu_thanithamizh100aandu

தனித்தமிழ் காப்போம்!                                                                                          தமிழராய் வாழ்வோம் !

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு –  சென்னை

அன்புடையீர் வணக்கம்

  தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டுக் கருத்தரங்கு ஒன்றை நடத்தவிருக்கிறோம். தனித்தமிழ் இயக்கம் சிறந்த அறிஞர்களின் படைப்புகளால் செழுமை அடைந்துள்ளது. அவர்கள் தங்கள் உழைப்பால் அதை உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால் இலக்கிய வரலாறு எழுதிய நல்லவர்கள் அதைப்புறக்கணித்துத் தமிழுக்கு மாறானவர்களின் உயர்வில்லாக் கொச்சைப் படைப்புகளையும் சொத்தைப் படைப்புகளையும் பெரிய களஞ்சியங்களைப்போலப் பணத்திரட்சிக்காகப் பதிவுசெய்து வைத்திருக்கின்றனர். இந்த நுாற்றாண்டுக் காலத்திலாவது உண்மையான இலக்கியச் செல்வங்களை நாம் மதித்து வெளிக்கொணர வேண்டும். அந்த முயற்சியில் சென்னைத் திருவள்ளுவர் வாழ்வியல் மன்றமும் புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கமும் இறங்கியிருக்கின்றன.

  தனித்தமிழ் அறிஞர்கள் உருவாக்கிய பன்முகப்   படைப்புகளின் உயர்தரம், அவற்றின் பரப்பு, ஆய்வு, பணிகள், போராட்டங்கள், கொள்கைப்பிடிப்பு, அறிஞர்களின் தொண்டு முயற்சிகள், அவர்களின் வாழ்க்கைக்குறிப்புகள்,  அவர்களின் வழித்தோன்றல்கள் முதலியசெய்திகளை வெளிக்கொணர்ந்து பதிவாக்க முயல்கிறோம். இலக்கியப் படைப்புகள்பற்றிய ஆய்வுக்கே மிகுதியான பக்கங்கள் வழங்கப்பெற வேண்டுகிறோம்.

அறிஞர்கள் அவர்களைப்பற்றி எழுதும் 20-25 பக்கக் கட்டுரைகள் முன்னதாகப் பெறப்படும். அவை செப்பமாகத் தொகுக்கப்பட்டு நுால் வடிவத்தில் உருவாக்கப் பெறும்.

பின்னர் நான்குநாள் கருத்தரங்குகளில் அவர்களின் கட்டுரைகளை அறிஞர்கள்  சொற்பொழிவுகளாக வழங்குவார்கள். அங்கேயே நுால் வெளியீடும் சிறப்பாக நிகழும்.

கட்டுரையாளர்கள் தங்கள் படம், கட்டுரை, முழுமையான வாழ்க்கைக் குறிப்புகள் முதலியவற்றை

அனுப்ப வேண்டிய கடைசி நாள் 

ஐப்பசி 09, 2047 /  25.10.2016

கருத்தரங்கம்

ஐப்பசி 21, 2047 / 06.11.2016 முதல் தொடங்கும்.

கட்டுரைகளைக் குறுந்தட்டில் ஒருங்குறி எழுத்தில்

தட்டச்சில் அனுப்பவேண்டும்.

மின்னஞ்சலிலும் அனுப்புதல் வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி vtthamizh@gmail.com

 பாவலர் செவ்வியன் 9962461632

முனைவர் க.தமிழமல்லன் 9791629979

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பின்குறிப்பிடப்படும் தனித்தமிழ் அறிஞர்களைப்பற்றிக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இடம் : திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் 311, ஐந்தாவது தெற்குக் குறுக்குத்தெரு,கபாலீசுவரர் நகர், நீலாங்கரை,சென்னை 600115

பொதுத்தலைப்பு – தனித்தமிழ் இயக்க வளர்ச்சிக்கு அறிஞர்களின் பங்களிப்பு 

நிகழ்நிரல்

அட்டவணை-தனித்தமிழ்க்கருத்தரங்கம், நிரல்01 ;azhai_thanithamizh_karutharangu_niral01அட்டவணை-தனித்தமிழ்க்கருத்தரங்கம், நிரல்02 ;azhai_thanithamizh_karutharangu_niral02